அதிகம் பேசப்படாத தலைப்பு இது. ஆனால், பேச வேண்டிய தலைப்பும் இது. பெண்கள் தங்களது பிறப்புறுப்பை எப்படி பராமரிக்க வேண்டும். பிறப்புறுப்பு தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் ஆபத்தானவை அல்ல. எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்? எது நார்மல், நார்மல் அல்ல போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.
வெஜினல் ஹெல்த்… பிறப்புறுப்பு சுத்தம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியம். தாய்மார்களும் தங்களது பெண் குழந்தைகளுக்கும் அதைச் சொல்லி கொடுக்கலாம். ஓரளவுக்கு புரிந்து கொள்கின்ற 10-12 வயது பெண் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கலாம். அதுபோல் நீங்களும் பிறப்புறுப்பை எப்படி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
பிறப்புறுப்பு சுத்தமாக, எந்தவித பிரச்னையும் இல்லாமல் இருந்தால் உங்களது உடல்நலமும் நன்றாக இருக்கிறது என அர்த்தம்.
ஹெல்தியான டயட், போதுமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தரையில் செய்ய கூடிய பயிற்சிகள் ஆகியவற்றால் உடல்நலம் நன்றாகவே இருக்கும்.
வெள்ளைப்படுதல்
உங்களுக்கு மாதவிலக்கு வரும் சமயத்தில் ஏற்படும் வெள்ளைப்போக்கு நார்மல்தான். அது பிரச்னையல்ல.
சாதாரணமாக ஏற்படும் வெள்ளைப்படுதலில் எந்த துர்நாற்றமும் இருக்காது. நிறமும் இருக்காது. அரிப்போ புண்களோ இருக்காது.
ஆனால், வெள்ளைப்படும் போது மேற்சொன்ன பிரச்னைகள் இருந்தால், அதை அவசியம் கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் செல்லுங்கள்.
இதையும் படிக்க : கருமை படிந்த தொடைகளை பளிச்சென மாற்றும் இயற்கை சிகிச்சைகள்
இதெல்லாம் நார்மல் அறிகுறிகள் அல்ல…
Image Source :Pulselive
மிகவும் திக்கான வெள்ளைப்படுதல், மஞ்சள், பச்சை நிறத்தில் வெள்ளைப்படுதல்.
பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுவது.
குழந்தை பிறந்து 6-8 மாதங்கள் கழித்தும் தாம்பத்யத்தில் ஈடுபட்டால் வலி வந்து அவதிப்படுவது.
தொடர்ந்து சிறுநீர் தொற்றுக்களால் பாதிக்கப்படுவது.
சிவப்பாக, வீக்கமாக இருக்கும் பிறப்புறுப்பு.
பிறப்புறுப்பு இடம் உலர்ந்து இருப்பது, தாம்பத்ய உறவின்போது உலர்ந்து இருத்தல் மற்றும் வலி ஏற்படுத்துதல்.
காரணமே இல்லாமல் வலிப்பது, எரிச்சல் உணர்வு, வெள்ளைப்படுதல் ஆகிய பிரச்னைகள் வருவது.
அதிகமாக ஜீன்ஸ், டைட்ஸ் பயன்படுத்தி அந்த இடத்தில் காற்றே செல்லாமல் தடுப்பது. இதனால் ஏற்படும் தொற்று.
மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் மகப்பேறு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
இதையும் படிக்க : 3 மாதத்தில் பிசிஓடியை விரட்டும் சிம்பிள் வீட்டு வைத்தியம்
பிறப்புறுப்பில் பிரச்னைகள் வராமல் தடுப்பது, தவிர்ப்பது எப்படி?
நீச்சல், ஜிம் சென்ற பிறகு உள்ளாடையை அவசியம் மாற்றுங்கள். அணிந்து கொண்டே இருந்தால் தொற்றுக்கள் வரும்.
சாதாரண தண்ணீர் அல்லது மிதமான சோப் போட்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்யலாம்.
எப்போதும் முன்னிலிருந்து பின் என்றே சுத்தம் செய்யுங்கள். பின்னிலிருந்து முன் என சுத்தம் செய்ய கூடாது. மலக்கிருமிகள் பிறப்புறுப்பு இடத்தைத் தாக்கும். தொற்றை ஏற்படுத்தும்.
உங்களது உள்ளாடைகளை அதிக கெமிக்கல் கொண்ட சோப், டிடர்ஜென்ட் பயன்படுத்தித் துவைக்க வேண்டாம். கெமிக்கல்களால் எரிச்சல், பாதிப்புகள் வரலாம்.
உங்களது உள்தொடைக்கு சில பயிற்சிகளைக் கொடுக்கலாம். சாரில் அல்லது படுக்கையில் படுத்துக் கொண்டு கால்களை சுவற்றில் வைத்து மடக்கி, நிமிர்த்தலாம். இப்படி சின்ன சின்ன பயிற்சிகள் செய்வதால் தொடை இடுக்குகளில் அதிக சதை இருக்காது. இதனால் அரிப்பு பிரச்னைகளும் வராது.
நேராக உட்காருவதைப் பழகி கொள்ளுங்கள். இதனால் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். பிறப்புறுப்பு, அடி இடுப்புக்கு பகுதிக்கு சீராக ரத்த ஓட்டம் செல்லும்.
3-4 மணி நேரத்துக்கு ஒருமுறை சானிட்டரி பேட் அல்லது டாம்பூனை மாற்றுங்கள்.
பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள முடிகளை அடிக்கடி டிரிம் செய்து கொள்ளுங்கள். முடியை நீக்கும் கிரீம் பயன்படுத்தி முடியை நீக்க வேண்டாம். அந்த இடத்தில் முடியை நீக்கும் கிரீமில் உள்ள கெமிக்கல்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
பிறப்புறுப்பை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?
வாசனை மிகுந்த சோப், பாடி வாஷ், ஜெல், ஆன்டிசெப்டிக் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
இவையெல்லாம் பி.எச் அளவை மாற்றி, பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.
உங்களுக்கு மாதவிலக்கு நடக்கும்போது, 2-3 முறையாவது பிறப்புறுப்பை சுத்தம் செய்யுங்கள்.
மலவாயும் பிறப்புறுப்பு பகுதியும் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
சாதாரண தண்ணீரோ சாதாரண உடலுக்குத் தேய்க்கின்ற சோப்போ போதுமானது. இதை வைத்தே பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்யலாம். இதற்காக எந்த பிரத்யேக வாஷ் எல்லாம் தேவையில்லை.
இயற்கையான முறையில் வெஜினல் வாஷ் செய்யலாம். அது எப்படி என இங்கே பாருங்கள்.
இதையும் படிக்க : வெள்ளைப்படுதலை குணமாக்கும் வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…
பிறப்புறுப்பில் எந்தத் தொற்றும் வராமல் இருக்க என்ன சாப்பிடலாம்?
Image Source : Loving it Vegan
தயிர், யோகர்ட், மோர் சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள ப்ரோபயாட்டிக் சத்துகள் தொற்றுக்கள் வராமல் தடுக்கும்.
தண்ணீர், இளநீர், நீர்ச்சத்து காய்கறிகள், பழங்கள் ஆகியவை பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பூண்டு, இஞ்சி
அவகேடோ
ஆப்பிள்
ஃப்ளாக்ஸ் விதைகள்
பாதாம்
ஜூஸ், ஸ்மூத்தி ஆகியவை நல்லது.
இதையும் படிக்க : 6 ஹெல்தி ஜூஸ் – ஸ்மூத்தி வகைகள்…
பிறப்புறுப்பைப் பாதுகாக்கும் உடைகள்…
டைட் ஃபிட்டிங் உடைகள், பிறப்புறுப்பு பகுதியை சூடாக்கும். தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
பருத்தியால் தயாரித்த உள்ளாடை அணிவது நல்லது. பாலிஸ்டர் வகை உள்ளாடைகள் தவிர்க்கவும்.
வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால் ஒரு நாளைக்கு இருமுறை உள்ளாடையை மாற்றுங்கள்.
இரவில் தூங்கும் போது உள்ளாடையைத் தவிர்க்கலாம்.
தாய்மார்கள் கவனத்துக்கு…
தாம்பத்ய உறவுக்கு பின்னர் உங்களது பிறப்புறுப்பை சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதனால் சில பாக்டீரியாக்களைத் தவிர்க்கலாம்.
தாம்பத்ய உறவு வைத்துக்கொண்டால் சிலருக்கு வலி இருக்கும். அதற்கு எண்ணெய், பெட்ரோலியம் ஜெல்லி போன்றவற்றை சிலர் பயன்படுத்துகின்றனர். அது தவறு. மருத்துவர் பரிந்துரைக்கும் லூப்ரிகன்ட் பயன்படுத்துவது நல்லது.
40 வயதுக்கு மேல் சர்விகல் ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.
இதையும் படிக்க : இயற்கையான முறையில் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்வது எப்படி?