Tamil Tips
குழந்தை சமையல் குறிப்புகள் பெண்கள் நலன் பெற்றோர்

பல நோய்கள் வராமல் தடுக்கும் ஒரே ஒரு மருந்து… இது நம் பாரம்பர்ய பொக்கிஷம்…

பாரம்பர்யமாக கடைபிடித்து வந்த சில நல்ல குழந்தை வளர்ப்பு முறைகளை நாம் காலப்போக்கில் மறந்துவிட்டோம். அதை நினைவூட்டவே இந்தப் பதிவு. குழந்தைகளுக்கு நோய்கள் தாக்காமல் ஆரோக்கியத்துடன் குழந்தைகள் வளர சில பாட்டி கால வைத்திய முறையைப் பற்றி இங்குப் பார்க்கலாம். ஒரே மருந்து பல நோய்கள் வராமல் காக்கும். அத்தகைய நன்மைகளைத் தரும் மருந்தைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

இந்தப் பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு. இப்படியான ஒரு விஷயம் முன்பெல்லாம் இருந்து வந்தது எனத் தெரிவிக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது. வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், நாட்டு மருத்துவம் போன்றவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இவற்றைப் பின்பற்றி பயனடையலாம்.

நவீன மருத்துவம் மீது நம்பிக்கை கொண்டவர்கள், இவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மருத்துவரிடம் கேட்ட பின் பயன்படுத்துங்கள். நாம் பாரம்பர்ய பழக்கத்தில் சில நல்ல விஷயங்களை நினைவுப்படுத்தவே இப்பதிவு.

விருப்பம் உள்ளவர்கள், இதைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தங்களது வீட்டு பெரியவர்களின் ஆலோசனை கேட்டும் பின்பற்றலாம்.

இந்த மருந்து தயாரிக்க, நாம் பயன்படுத்தப் போவது 6 மூலிகைகள்தான். இந்த மூலிகைகளை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள்.

Thirukkural

ஆம்… 6 மூலிகைகளை வைத்து நாம் குழந்தைக்கு ‘உரை மருந்தை’ தயாரிக்கப் போகிறோம்.

உரை மருந்து என்றால்…

குழந்தை அறிவாற்றலுடன் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ, முன்பெல்லாம் உரை மருந்து தயாரித்துக் குழந்தைக்கு கொடுக்கும் பழக்கம் இருந்து வந்தது.

உரை மருந்தை, பிறந்து 30 நாட்கள் முடிந்த குழந்தை முதல் 3-5 வயது குழந்தைகள் வரை உரை மருந்து கொடுத்துக் குழந்தைகளை வளர்த்தனர் நம் முன்னோர்கள்.

தற்போது இப்பழக்கம் குறைந்துவிட்டது. ஆனால், சில ஊர்களில் சிலர் இந்த உரை மருந்து கொடுக்கும் பழக்கத்தை இன்றும் தொடர்ந்து கடைபிடித்தும் வருகின்றனர்.

ஏன் கொடுக்க வேண்டும்?

பல நன்மைகள் குழந்தைக்கு கிடைக்கும். எந்த நோய்களும் பெரும்பாலும் தாக்கப்படாமல் குழந்தைகளைக் காக்கும்.

இந்த மருந்து தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் இவைதான்.

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்

Image Source : youtube

1. வசம்பு

இதைப் பிள்ளை வளர்ப்பான் என்றே சொல்வார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி தரும்.

பசியின்மை போக்கும்.

சுறுசுறுப்பைத் தரும்.

வயிறு தொடர்பான பிரச்னைகளை நீக்கும்.

மலச்சிக்கலைத் தீர்க்கும்.

வாயு தொல்லைகளை நீக்கும்.

சளி, இருமல் கூட சரியாகும்.

பால் செரிக்காமல் வெளுத்த நிறத்தில் மலம் போவதைத் தடுக்கும்.

வயிறு உப்புசம் நீங்கும்.

உடல் வளர்ச்சிக்கு உதவும்.

2. சித்தரத்தை

நெஞ்சு சளியை நீக்கும்.

தொண்டை, மார்பில் கட்டி உள்ள சளியை நீக்கும்.

குழந்தைக்கு சளி பிடிக்காமல் பாதுகாக்கும்.

3. சுக்கு

வாந்தி, வயிறு வலி பிரச்னை நீக்கும்.

வயிற்றில் வாயு சேராமல் தடுக்கும்.

வயிற்று வலியால் குழந்தை தவிக்காமல் பார்த்துக்கொள்ளும்.

அஜீரண பிரச்னை இருக்காது.

4. ஜாதிக்காய்

குழந்தைகள் தூங்க உதவும்.

பசி சீராக எடுக்க உதவும்.

குழந்தை சிடுசிடுவென்று அடிக்கடி அழுவதைத் தடுக்கும்.

அடிக்கடி குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.

5. கடுக்காய்

நல்ல செரிமான சக்தியைத் தரும்.

வயிற்றில் கெட்ட காற்று உருவாகுவதைத் தடுக்கும்.

குடல், இரைப்பை, கல்லீரல் ஆகியவற்றை சரியாக இயங்க செய்யும்.

மலமிலக்கியாக செயல்படும்.

6. மாசிக்காய்

சிறுநீர் சீராக வெளியாக உதவும்.

பசியைத் தூண்டும்

வாய்ப் புண், குடல் புண் வராமல் தடுக்கும்.

செரிமான கோளாறு நீக்கும்.

இதையும் படிக்க: டயாப்பரால் ஏற்படும் பாதிப்புகள்… 99.9% குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

எப்போது கொடுக்க வேண்டும்?

வாரம் இருமுறை உரை மருந்தை குழந்தைக்கு தரலாம்.

குழந்தைக்கு தலைக்கு ஊற்றிய நாட்களில், இந்த உரை மருந்தை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

உரை மருந்து தயாரிப்பது எப்படி?

urai marundhu medicine

இதையும் படிக்க: குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

Image Source : Home remedies

தேவையானவை

வசம்பு – 1

சித்தரத்தை – 1

சுக்கு – 1

ஜாதிக்காய் – 1

மாசிக்காய் – 1

கடுக்காய் – 1

செய்முறை

உரை மருந்தை உரசி எடுக்க உதவும் உரைக்கல்லை வாங்கி கொள்ளுங்கள்.

இந்த உரைக்கல்லை, குழந்தைக்கு மருந்து தயாரிக்க மட்டுமே பயன்படுத்துங்கள்.

இந்த கல்லை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

மண்ணால் தயாரித்த அகல் விளக்கில், விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுங்கள்.

இந்த நெருப்பில் மேற்சொன்ன 6 மூலிகைகளையும் நெருப்பில் காட்டி சுட வையுங்கள்.

சுட வைத்த பின், உரைக்கல்லில் உரசலாம்.

ஒரு மாத குழந்தைக்கு என்றால், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என ஒரு முறை உரசி தேய்த்தாலே போதும். 6 மூலிகைகளையும் ஒரு முறை உரசி தேய்க்கலாம்.

இரண்டு மாத குழந்தைக்கு என்றால், இரு முறை மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என உரசலாம்.

இப்படி குழந்தையின் மாதத்துக்கு ஏற்றது போல மூலிகையை எத்தனை முறை வேண்டும் என உரசி கொள்ளுங்கள்.

மேற்சொன்ன 6 மூலிகைகளையும் இப்படிதான் உரசி மருந்து தயாரிக்க வேண்டும்.

ஒரு மாதம் முடிந்த குழந்தைக்கு…

அதாவது பிறந்து 30 நாட்கள் முடிந்த குழந்தைக்கு, 6 மூலிகைகளையும் நெருப்பில் சுட்டு ஒரு முறை உரசி மருந்தை தயாரிக்கவும்.

0-6 மாத குழந்தைகளுக்கு மருந்து தயாரித்தீர்கள் என்றால், தாய்ப்பால் ஒரு துளி விட்டு விட்டு இந்த 6 மருந்துகளையும் உரசி வழித்துக் கொள்ளலாம்.

இதைப் பாலாடையில் வழித்து, ஊற்றி குழந்தைக்கு கொடுக்கலாம்.

இரண்டு மாத குழந்தைக்கு…

6 மூலிகையையும் அதேபோல நெருப்பில் சுட்டு, இருமுறை உரசி தாய்ப்பால் சில சொட்டுகள் விட்டு மருந்தை தயாரிக்கவும்.

3-6 மாத குழந்தைகள் வரை…

3 மாதம் – 6 மூலிகைகளையும் அதேபோல 3 முறை உரசி மருந்து தயாரிக்கவும்.

4 மாதம் – 6 மூலிகைகளையும் அதேபோல 4 முறை உரசி மருந்து தயாரிக்கவும்.

5 மாதம் – 6 மூலிகைகளையும் அதேபோல 5 முறை உரசி மருந்து தயாரிக்கவும்.

6 மாதம் – 6 மூலிகைகளையும் அதேபோல 6 முறை உரசி மருந்து தயாரிக்கவும்.

இதையும் படிக்க: குழந்தைக்கு உண்டாகும் காய்ச்சலுக்கான 10 வீட்டு வைத்தியம்…

6 மாத + குழந்தைகளுக்கு முதல் 12 மாத குழந்தைகள் வரை…

இதேபோல உரசும் அளவைக் குழந்தையின் மாதத்துக்கு ஏற்றது போல அதிகரித்துக் கொள்ளவும்.

உதாரணத்துக்கு, 12 மாத குழந்தைக்கு, ஒவ்வொரு மூலிகையும் 12 முறை தேய்த்து, உரசி மருந்து தயாரிக்க வேண்டும்.

6+ மாத குழந்தைகளுக்கு இந்த மருந்தை தயாரிக்க, தாய்ப்பால் துளிகள் சிறிதளவு விட்டும் மருந்து தயாரிக்கலாம். அல்லது தண்ணீர் துளிகள் சிறிதளவு விட்டும் உரை மருந்து தயாரிக்கலாம். இது உங்களது விருப்பம்.

1 வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு…

இந்த 6 மூலிகைகளை உரசி, தேய்த்து வாரம் தோறும் இருமுறை கொடுத்து வரலாம்.

ஒவ்வொரு மூலிகையையும் 12-15 முறை வரை உரசி மருந்து தயாரித்து கொடுக்கலாம். இந்த மருந்து தயாரிக்க சுத்தமான தண்ணீர் விட்டு தயாரிக்கலாம். தாய்ப்பால் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இந்த மருந்தை உண்டு வரும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளருவார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியுடன் வளருவார்கள்.

அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு போன்ற எந்தத் தொந்தரவுகளும் வராமல் தடுக்கும் மருந்து இது.

கவனிக்க

இந்த மருந்தைத் தயாரிப்பவரின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.

மருந்தைத் தயாரிக்க பயன்படும் உரைக்கல்லும் சுத்தமாக இருப்பது நல்லது.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான பல் வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுக்கிறதா?காரணங்கள் & தீர்வுகள்

tamiltips

குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

tamiltips

குழந்தை உருவாக உறவு கொள்வது எப்படி?

tamiltips

குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைக்கலாமா?

tamiltips

வாயு தொல்லையைப் போக்க என்னென்ன வழிகள்? உடனடி தீர்வு…

tamiltips

வெள்ளை படுதல் குணமாக வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…

tamiltips