Tamil Tips
குழந்தை பெற்றோர்

குழந்தைகளுக்கான பல் வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

சில இடங்களில் ஏற்படும் வலியை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதில் ஒன்றுதான் பல் வலி. இந்த வலியை அனுபவித்தோருக்குதான் அதன் தீவிரம் தெரியும் என்பார்கள். நரம்புத் தொடர்பானது, முகம் முழுவதும் வலி பரவும். முகம் வீக்கமும் அடையும். மருத்துவரை சந்திக்கும் முன் நம்மை இந்த வலியிலிருந்து காப்பாற்றி கொள்ள சில வீட்டு வைத்திய முறைகளைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகள் பொதுவாக நிறைய சாக்லேட், ஐஸ்கிரீம் சாப்பிட்டு பல் வலியால் அவஸ்தைப்படுவர். இரவில் வலி வந்துவிட்டால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிப்போம்.

சின்ன சின்ன வீட்டு வைத்தியங்களைத் தெரிந்து கொண்டால், பல் வலி வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். அதே சமயம், முறையான பராமரிப்பு முறைகளைத் தெரிந்து கொண்டாலும் பல் வலி, பற்கள் பாதிக்காமல் தவிர்க்கலாம்.

குழந்தைகள், பெரியவர்களுக்கான பல் வலியைப் போக்கும் வீட்டு வைத்திய முறைகள்

#1. கல்லுப்பு தண்ணீர்

ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் 3 கல்லுப்பு போட்டு கரைத்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

அதிகமாகக் கல்லுப்பை போட கூடாது. ¼ டீஸ்பூன் மேல் கல்லுப்பை போட கூடாது.

Thirukkural

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கூட சேர்க்கலாம்.

காலை, மாலை, இரவு என வாய் கொப்பளித்தால் பல் வலி அடங்கும்.

தொண்டை வலி இருந்தாலும் குறையும்.

tooth ache home remedies

Image Source : The smile anchorage

இதையும் படிக்க: இருமல், வறட்டு இருமலை போக்கும் 16 வீட்டு வைத்தியம்

#2. கோதுமை புல் ஜூஸ்

கோதுமை புல் ஜூஸில் குணமாக்கும் மூலப்பொருட்கள் உள்ளன.

உடலுக்குள் சென்று வீக்கத்தைக் குறைக்கும்.

கிருமிகளை அழிக்கும். அதில் உள்ள பச்சையம் கிருமிகளை எதிர்த்துப் போராடும்.

கோதுமை புல் ஜூஸை மவுத் வாஷ் போல வாயில் வைத்துக் கொப்பளிக்க பல் வலி குறையும்.

#3. தைம் எண்ணெய்

ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் தைம் எண்ணெய் 2 சொட்டு விட்டு, வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.

#4. கிராம்பு எண்ணெய்

ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் கிராம்பு எண்ணெய் 2 சொட்டு விட்டு, வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.

#5. கொய்யா இலைகள்

கொய்யா இலைகள் துளிராக இருந்தால், அதை நன்கு கழுவி, மென்று சாப்பிடலாம். பல் வலி குறையும்.

கொய்யா இலைகள் – 8, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஒரு டம்ளராக சுண்டியதும் அதை இளஞ்சூடாக்கி வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.

இதையும் படிக்க: டயாப்பரால் ஏற்படும் பாதிப்புகள்… 99.9% குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

#6. புதினா இலைகள்

ஒரு கைப்பிடி புதினா இலைகளை 2 டம்ளர் வெந்நீரில் கொதிக்கவிட்டு, 20 நிமிடம் அப்படியே ஆறவிட்டு, அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கவும்.

அந்த புதினா தண்ணீரை மவுத் வாஷ் போல வாயில் வைத்துக் கொப்பளிக்க வேண்டும்.

#7. அக்குபிரஷர் புள்ளி

acupressure point for tooth ache

Image Source : Acupressure points guide

கையின் கட்டைவிரலின் மேல் பகுதியை, அதாவது முதல் ரேகையின் மேல் உள்ள பகுதியை மிதமான அழுத்தம் கொடுத்து, 10 நிமிடங்கள் வரை அடிக்கடி பிடிக்க பல் வலி குறையும். இதெல்லாம் அப்போதைக்கு வலி குறைய, பிறகு பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை செய்து கொள்வது நல்லது.

சின்ன குழந்தைகளுக்கு, பெற்றோர் மிதமாக அழுத்தி விடலாம்.

இதையும் படிக்க: குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

#8. ஹோம்மேட் மிளகு பேஸ்ட்

ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் இந்துப்பு அல்லது அரைத்த கல்லுப்பு. இவற்றை சிறிது நீர் விட்டு பேஸ்டாக்கி, வலி உள்ள இடத்தில் தடவுங்கள்.

#9. பூண்டு + கிராம்பு

ஒரு பூண்டு, 2 கிராம்பு இடித்து, தட்டி வைக்கவும். இதனுடன் இந்துப்பு அல்லது சாதாரண உப்பு கலந்து பல் வலி உள்ள இடத்தில் வைக்கவும்.

#10. கிராம்பு பேஸ்ட்

ஒரு டீஸ்பூன் கிராம்பு பொடி, அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் அல்லது வேறு எதாவது வெஜிடெபிள் எண்ணெய் சேர்த்து, கலந்து… பல் வலி உள்ள இடத்தில் பூசலாம்.

இதையும் படிக்க: சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?

#11. சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் இடித்து, அதன் சாறு வெளிவருவது போல, பல் வலி உள்ள இடத்தில் வைக்கவும். இதனால் கிருமிகள் அழியும்.

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை

3 மாதத்துக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

எப்போதும் சாஃப்ட் பிரஷ் பயன்படுத்துவது நல்லது.

பட்டாணி அளவு பற்பசையே போதுமானது. அதிகமாக பற்பசை போட தேவையில்லை.

நல்லெண்ணெயால் வாய் கொப்பளித்து துப்புவது நல்லது. இதை ‘ஆயில் புல்லிங்’ என்பார்கள்.

ஐஸ் வாட்டர் குடிக்கவே கூடாது.

மிகவும் சூடான உணவுகளை சாப்பிட வேண்டாம்.

இளஞ்சூடாக சாப்பிடுவது நல்லது.

ஐஸ்கிரீம் முடிந்தவரைத் தவிருங்கள். 3 மாதத்துக்கு ஒருமுறை சாப்பிடுங்கள்.

சாக்லேட்ஸ், கேன்டி, கலர் மிட்டாய்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

புதினா, எலுமிச்சை கலந்த ஜூஸ் குடிப்பது நல்லது.

குளிர்பானங்களை அறவே தவிர்த்து விடுங்கள்.

குழந்தைகளுக்கும் சாக்லேட் வாங்கி தரவேண்டாம்.

எப்போதும் உப்பு தண்ணீரால் வாய் கொப்பளிப்பதைப் பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

காலை, இரவு என இருவேளையும் பல் துலக்குவது நல்லது.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், மீண்டும் அதே பிரஷ் பயன்படுத்த வேண்டாம். மாற்றி விடுங்கள்.

தாங்களாகவே எந்த மவுத் வாஷ்ஷூம் வாங்கி பயன்படுத்த வேண்டாம்.

ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பது நல்லது.

அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்க்கவும்.

இதையும் படிக்க: குழந்தைக்கு உண்டாகும் காய்ச்சலுக்கான 10 வீட்டு வைத்தியம்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

7 மற்றும் 8 மாத குழந்தையின் வளர்ச்சியும் பாதுகாப்பு முறைகளும்…

tamiltips

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் 9 வகை டீடாக்ஸ் டிரிங்க்ஸ் ரெசிபி…

tamiltips

6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்

tamiltips

கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை…

tamiltips

குழந்தைகளுக்கான ஹோம்மேட் வேப்பர் ரப் செய்வது எப்படி?

tamiltips

குழந்தைகளுக்குத் தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

tamiltips