Tamil Tips
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

குழந்தைக்கு உண்டாகும் காய்ச்சலுக்கான 10 வீட்டு வைத்தியம்…

குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்வதே என்றே தெரியாமல் பதறிப் போவோம். காய்ச்சல் வந்தால் என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம் எனத் தெரிந்துகொண்டால் தேவையற்ற பதற்றம் நீங்கி தைரியமாக குழந்தையைப் பராமரிக்க முடியும். அவற்றைப் பற்றி விளக்கமாக இங்கு காணலாம்.

காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஏசியில் குழந்தையை படுக்க வைக்க கூடாது. சாதாரண ஃபேன் காற்றில் படுக்க வைக்க வேண்டும்.

குழந்தைக்கு அதிகமான லேயர் கொண்ட உடைகள் அணிந்திருந்தால் அவற்றை நீக்கி விடுங்கள். ஒரே ஒரு துணியை அணிந்திருக்கும்படி செய்யுங்கள். காட்டன் துணியாக இருப்பது நல்லது.

மெர்குரி உள்ள தர்மாமீட்டரை குழந்தைக்கு பயன்படுத்த கூடாது. இது குழந்தைகளை பாதிக்கும்.

0-5 மாத குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், 101 க்கு மேல் அதிகம் போக கூடாது. அப்படி போனால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவும்.

Thirukkural

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, 102 க்கு மேல் அதிகம் போக கூடாது. அப்படி போனால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவும்.

காய்ச்சலைக் குறைக்கும் 10 வீட்டு வைத்தியம்

#1. நெற்றியில் ஈரத்துணி

குழந்தையின் நெற்றியில் காட்டன் துணியை நனைத்து, பிழிந்து அதை நெற்றியில் பற்று போல மடித்து போட்டால் காய்ச்சல் குறையும். உடலிலும் ஈரத் துணியை ஒத்தி ஒத்தி எடுக்கலாம். இதனால் காய்ச்சல் விரைவில் குறையும்.

குழந்தையை இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.

#2. தாய்ப்பாலே சிறந்த மருந்து

குழந்தைக்கு திரவ உணவுகளை கொடுத்திட வேண்டும். 0-6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் அதிக அளவில் கொடுப்பது நல்லது.

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால், சுத்தமான தண்ணீர், பழச்சாறு கொடுக்கலாம்.

மருத்துவர் பரிந்துரைத்து இருந்தால் சலைன் டிராப்ஸை குழந்தையின் மூக்கில் போடலாம்.

இதையும் படிக்க: டயாப்பரால் ஏற்படும் பாதிப்புகள்… 99.9% குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

onion rub for fever

Image Source : Youtube

இதையும் படிக்க: 0 – 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்…

#3. வெங்காய சிகிச்சை

வெங்காயத்தை அறிந்து அதைக் குழந்தையின் உள்ளங்காலில் 2 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை இந்த சிகிச்சையை செய்யலாம்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெங்காய சாறை 2 டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட கொடுக்கலாம். இதனாலும் காய்ச்சல் குறையும்.

#4. இஞ்சி குளியல்

2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பவுடரை குழந்தை குளிக்கும் இளஞ்சூடான தண்ணீர் டப்பில் போட்டு அந்த தண்ணீரில் குழந்தையை 10 நிமிடம் வைத்திருக்கலாம்.

#5. லெமன் தேன்

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் அதனுடன் இஞ்சி சாறை 4 சொட்டு கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வைத்தியம்.

#6. உலர் திராட்சை

அரை கப் தண்ணீரில் 25 உலர் திராட்சைகளை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியதும் திராட்சை மிருதுவாகிவிடும். அப்போது அதைப் பிழிந்து அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை தர வேண்டும். 8+ மாத குழந்தைகளுக்கான வைத்திய முறை இது.

இதையும் படிக்க: இருமல், வறட்டு இருமலை போக்கும் 16 வீட்டு வைத்தியம்

#7. தனியா தண்ணீர்

இரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் ஒன்றும் பாதியுமாக அரைத்த தனியாவை ஒரு டீஸ்பூன் அளவு போடவும். நன்கு கொதி வந்து பாதியாக சுண்டியதும், அதை வடிகட்டி கருப்பட்டி சேர்த்து குழந்தைக்கு இளஞ்சூடாக குடிக்க கொடுக்கலாம். 8+ மாத குழந்தைகளுக்கான வைத்திய முறை இது.

tulsi water for fever

#8. துளசி தண்ணீர்

துளசி தண்ணீரை தயாரித்து உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்கலாம். துளசி தண்ணீர் தயாரிக்கும் முறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படிக்க: சளி, காய்ச்சலை விரட்டும் துளசி தண்ணீர் செய்வது எப்படி?

#9. வெந்தய தண்ணீர்

2 கப் தண்ணீரில் முன்னாள் இரவே 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறுநாள் அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் அடிக்கடி சிப் செய்து குடிக்க வேண்டும்.

#10. தூக்கமும் மருந்துதான்

காய்ச்சலை உடலில் ஏற்படுத்தி நோய் கிருமிகளை அழிக்கும் வேலை, உடலில் நடந்து கொண்டிருக்கும். இந்த சமயத்தில் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். நன்கு தூங்க வேண்டும். இதுவே காய்ச்சலை விரைவில் விரட்டும் மருந்து.

இதையும் படிக்க: குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படாமல் தடுக்க, என்ன கற்றுத்தர வேண்டும்?

tamiltips

தாய்மார்களுக்கான 5 வெயிட் லாஸ் ஈஸி ரெசிபி

tamiltips

கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது? பயணிக்க உதவும் பாதுகாப்பு டிப்ஸ்…

tamiltips

வாயு தொல்லையைப் போக்க என்னென்ன வழிகள்? உடனடி தீர்வு…

tamiltips

வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?!

tamiltips

அற்புத மருந்து கழற்சிக்காய் நன்மைகள்- Kalarchikai

tamiltips