Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை பிறப்புக்குப் பிறகு எடை குறைக்க மூன்றே வழிகள்!

1.     
அளவான உணவு, போதிய தண்ணீர்

பிரசவத்துக்குப் பிறகு  உணவுக்
கட்டுப்பாடு மிகவும் அவசியம். இந்த நேரத்தில் நிறைய பேருக்கு  மன
இறுக்கம், எரிச்சல் இருக்கலாம் அதற்காக  முழுமையாக
உணவுக் கட்டுப்பாடு இருப்பது
அல்லது பட்டினி  இருப்பதோ
வேண்டாம். பசிக்கும்போது மட்டும்  சாப்பிட வேண்டும். இது கலோரி
அளவைக் கட்டுக்குள்
வைத்திருக்க உதவும்.
தாய்ப்பால் கொடுக்கும்
காலத்தில், தினசரி
உணவில் 300 கலோரி
கூடுதலாகச் சேர்த்தால்
போதும். நீங்கள்
சாப்பிடும் உணவு
ஊட்டச் சத்து
நிறைந்ததாகவும் கொழுப்பு
குறைந்ததாகவும் இருக்கட்டும்.
அதிக சர்க்கரை,
க்ரீம், எண்ணெயில்
பொரித்த உணவுகள்
போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

உடலின் நீர்ப்
பற்றாக்குறையைத் தீர்க்க,
நாளன்றுக்கு இரண்டரை
முதல் மூன்றரை
லிட்டர் தண்ணீர்
குடியுங்கள். இது
உங்கள் தோல்
ஆரோக்கியமாக இருக்கவும்
உடலின் வளர்சிதை
மாற்றத்தைத் தூண்டவும்
உதவும். மூன்று
முதல் நான்கு
மணி நேரத்துக்கு
ஒரு முறை
சிறுநீர் போக
வேண்டும். இது
சிறுநீரகத் தொற்றைத்
தவிர்க்கும்.

2.    
கொஞ்சம் உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது
உடல் எடையைக்
குறைக்க உதவுவதுடன்,
மன அழுத்தத்தை
வெளியேற்றி நல்ல
தூக்கத்தையும் கொடுக்கும்.
இதற்காக ஜிம்முக்குச்
சென்று கடுமையாக
உடற்பயிற்சி செய்ய
வேண்டும் என்பதெல்லாம்
இல்லை. தினமும்
நடைப்பயிற்சி செய்தாலே
போதும். யோகா
செய்வதும் உடல்
எடையைக் குறைக்க
உதவும். தாய்ப்பால்
கொடுக்கும் நேரத்தில்
தீவிர உடற்பயிற்சி
கூடாது. அது
பாலில் லாக்டிக்
அமிலத்தின் அளவை
அதிகரித்துப் புளிப்புத்
தன்மையைக் கூட்டிவிடும்.

Thirukkural

3.    
எட்டு மணி நேரத் தூக்கம்

குழந்தை எப்போது தூங்குகிறதோ, அதுதான் தாய்க்கும் தூங்கும் நேரமாக இருக்க வேண்டும். அதனால்  குழந்தை
தூங்கி எழும்
நேரத்தில் நீங்களும்
எழுங்கள். சரியாகத்
தூங்காமல் இருப்பதும்
தேவைக்கு அதிக
நேரம் தூங்குவதும்
உடல் எடையை
அதிகரித்துவிடும். தினமும்
எட்டு மணி
நேரம் தூங்குவது
நல்லது. இந்த மூன்று வழிகளையும் கடைபிடித்துவந்தால் நிச்சயம் உடல் எடையை குறைத்துவிடலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஒல்லி குச்சினு கிண்டல் பண்றாங்களா? இதோ இயற்கை முறையில் உடல் எடை கூட்ட வழிகள்!

tamiltips

நீண்ட நாட்களாக குழந்தையில்லையா!! இதோ குழந்தை இல்லாத தம்பதிக்கு செவ்வாழையின் அற்புத செய்தி

tamiltips

திடீரென பாதை மாறி அதி தீவிர புயலானது ஃபானி! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

tamiltips

குழந்தை ரெடி

tamiltips

உங்கள் சருமம் இயற்கையான முறையில் பிரகாசிக்க ஆசையா? அப்போ இதை செய்யுங்க!

tamiltips

கண்ணாடிபோல மின்னும் இளமையுடன் என்றும் இருக்கணுமா! அதுக்கு இந்த ஒன்னு போதும்!

tamiltips