Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஆண்கள் குடிக்கும் பானத்தில் மாதவிடாய் ரத்தத்தை கலக்கும் இளம் பெண்கள்..! பல தலைமுறை ரகசியம்..!

காலம் காலமாக பெண்களின் மாதவிடாய் பற்றி பல நிரூபிக்கப்படாத நம்பிக்கைகள் இந்த உலகில் பல இடங்களில் நிலவி வருகின்றன. இன்னுமும் சில இ‌டங்களில் அந்த நம்பிக்கைகள் நிலவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் புனித செடிகளுக்கு அருகில் செல்லக் கூடாது எனவும் அவர்கள் அக்காலங்களில் புனித மற்றவர்களாக கருதப்பட்டு வருகின்றனர். ஒருவேளை இந்த மாதவிடாய் காலங்களில் பெண்கள் அந்த செடிகளை தொட்டால் அதுவும் புனிதமற்றதாக மாறிவிடும் என நம்பப்படுகிறது. இன்றும் இந்த நம்பிக்கை நம் நாட்டில் நிலவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதேபோல் நம்முடைய முன்னோர்கள், ஆண்கள் பெண்களின் மாதவிடாய் காலங்களின்போது அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக பிறப்பார்கள் என்று நம்பினர். ஆனால் இதுவரை அதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது என்பது நிதர்சனமான உண்மை. இதேபோல் பிரஞ்சு நாட்டில், மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொண்டால் அரக்கர்கள் பிறப்பார்கள் எனவும் நம்பினர். பண்டையகால ரோமானியர்களோ மாதவிடாய் காலங்களில் பெண்களை சூனியக்காரிகளாக சித்தரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை இருண்ட மந்திரவாதிகள் எனவும் அழைத்தனர்.

இதே மாதிரி ஆபிரிக்காவில், ஒரு ஆணை மயக்குவதற்கு ஒரு பெண் தன்னுடைய மாதவிடாய் காலத்தின் போது வெளியேறும் ரத்தத்தை அவரது காபியிலோ அல்லது வேறு ஏதேனும் பானத்திலோ கலந்து கொடுக்கலாம் என்று நம்பினர். மேலும் இதனை ஒரு வசிய பொருளாக அவர்கள் பார்த்துள்ளனர். ஐரோப்பா நாட்டை சேர்ந்த மக்கள் பலரும் தொழுநோயை குணப்படுத்த மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தம் பயன்படுத்தப்படும் என்று நம்பினர். மேலும் இதனை ஏவாளின் சாபம் என்றும் அவர்கள் கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Thirukkural

இதேபோன்று ரோமானிய நாட்டைச் சேர்ந்த இயற்கையியலாளர் எல்டர் என்பவர் பெண்களின் மாதவிடாய் குறித்து பல கருத்துக்களை கூறியிருக்கிறார். அதாவது மாதவிடாய் இருக்கும் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டால் புதிய ஒயின் கூட புளிப்பாக மாறும் எனவும் பயிர்கள் வாடிப்போகும், தேனீக்களை கொன்றுவிடும், தோட்டங்களில் விதைகளை காய வைக்கும், இரும்பு மற்றும் வெண்கலம் போன்ற உலோகங்களை துருப்பிடிக்க வைக்கும், காற்றில் ஒரு படுபயங்கரமான வாசனையை உண்டாக்கும் என பல வினோதமான தகவலை அவர் கூறியிருக்கிறார். இதுபோன்று ஐரோப்பியர்கள் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை கட்டுப்படுத்துவதற்காக தவளையை எரித்து சாம்பலாக்கி துணியில் முடிந்து அதனை பெண்களின் யோனிக்கு அருகில் கட்டி கொண்டதாக பல தகவல்கள் கூறப்படுகிறது. 

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வெட்டி வேரின் அளவில்லா மருத்துவ குணங்கள்! எல்லா விதமான தோல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும்!

tamiltips

வைரலாகும் சன் டிவி ஆன்கர் அனிதா போட்டோ! உள்ளே மேலும் சில போட்டோஸ்!

tamiltips

கண்ணாடி அணிந்த தழும்பு மூக்கின் மேல் அசிங்கமாக இருக்கிறதா? இதோ அதை போக்கும் வழி!

tamiltips

கர்ப்பிணி பிரசவத்திற்கு தயாராவது எப்படி?

tamiltips

மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

tamiltips

அளப்பரிய மருத்துவ பலன்கள் தரும் சிவனார் வேம்பு! சரும வியாதியிலிருந்து சர்க்கரை வியாதி வரை பல நோய்களுக்கு மருந்து!

tamiltips