Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இளம் வயதில் மரணிக்கும் அபாயம்! ஆபத்தில் இந்திய பெண்கள்! காரணம் இந்த நோய் தான்!

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் இந்தியர்களை மிரட்டும் புதிய நோயாக உருவெடுத்துள்ளது. நாளுக்கு நாள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2030ம் ஆண்டின்போது, இந்தியாவில் மட்டும் 10 கோடி பேர் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட நேரிடலாம் என,  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கத்திய லைஃப்ஸ்டைல் நுகர்வு காரணமாக, ஆசிய நாடுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைவிடவும் அதிகமாகும். குறிப்பாக, இந்தியாவில், நீரிழிவு நோய் பாதிப்பு மிக வேகமாக உள்ளது.

இந்திய பெண்களுக்கு, நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. அத்துடன், அவர்களில் பலர் நீரிழிவு நோயால் உயிரிழக்கவும் கூடும். அந்தளவுக்கு, இந்திய நடுத்தர வயது பெண்களிடையே உடல்நல அக்கறை குறைந்து காணப்படுவதாகவும், உலக சுகாதார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஐந்தே நிமிடத்தில் அழகு தரும் சிம்பிள் அழகுக் குறிப்புகள் இதோ

tamiltips

இரவு உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு படுங்கள்! இத்தனை நன்மைகளையும் அடையுங்கள்!

tamiltips

கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் ஆபத்து வருமா?

tamiltips

சிசுவுக்கு காது கேட்குமா – பிறவிக் குறைபாடு நீக்கும் ஃபோலிக் அமிலம் – பிறந்த குழந்தையை தினமும் நீராட்டலாமா

tamiltips

உலக அழகி பட்டம் வென்றார் வனஸ்சா! இவர் யார் தெரியுமா?

tamiltips

குழந்தை ரெடி

tamiltips