Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சித்தர்கள் பாடிய இது தான் மருந்து! வேறு ஏதும் அவசியமில்லை!

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது  சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை ; முடிவளர நீலிநெல்லி ; ஈளைக்கு முசுமுசுக்கை ; எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன் ; பசிக்குசீ ரகமிஞ்சி ;கல்லீரலுக்கு கரிசாலை ; காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை ; காதுக்கு சுக்குமருள் ;தொண்டைக்கு அக்கரகாரம் ; தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான் ; நாசிக்கு நொச்சிதும்பை; உரத்திற்கு முருங்கைப்பூ ; ஊதலுக்கு நீர்முள்ளி

Thirukkural

முகத்திற்கு சந்தனநெய் ; மூட்டுக்கு முடக்கறுத்தான் ; அகத்திற்கு மருதம்பட்டை; அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை ; உணர்ச்சிக்கு நிலப்பனை; குடலுக்கு ஆமணக்கு

கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே; கருப்பைக்கு அசோகுபட்டை

களைப்பிற்கு சீந்திலுப்பு; குருதிக்கு அத்திப்பழம்;  குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை; வெள்ளைக்கு கற்றாழை; சிந்தைக்கு தாமரைப்பூ; சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்; காய்ச்சலுக்கு நிலவேம்பு; விக்கலுக்கு மயிலிறகு; வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்; நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்; வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ; வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை; சீழ்காதுக்கு நிலவேம்பு; நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்; நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்; குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்; பெரும்பாட்டிற்கு அத்திநாவல்; பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்; கழிச்சலுக்கு தயிர்சுண்டை; அக்கிக்கு வெண்பூசனை; ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி; விதைநோயா கழற்சிவிதை; புண்படைக்கு புங்கன்சீமையகத்தி; புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்; கரும்படை வெட்பாலைசிரட்டை; கால்சொறிக்குவெங்காரபனிநீர்; கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு; உளம்மயக்க கஞ்சாகள்ளு; உடல்இளைக்க தேன்கொள்ளு; உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்; அன்றாடம்சிறுபிணிக்கு; அருமருந்தாய் வழங்கியதை; அறிந்தவரை உரைத்தேனே!!

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தை உருவாகமல் இருக்க பெண்கள் யோனியில் அந்த காலத்தில் வைக்கப்பட்ட பொருட்கள்..! நெஞ்சை உலுக்கி எடுக்கும் தகவல்கள்!

tamiltips

வெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வெள்ளரி போதுமே!

tamiltips

எவ்வளவு நாள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும்?

tamiltips

உங்கள் பல்லை பளிச்சென்று மாற்ற சிறந்த வழி? மஞ்சள் பழுப்பு நிறத்திலிருந்து உடனே விடுதலை!

tamiltips

செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்த தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு என்ன நன்மைகள் என்று தெரியுமா?

tamiltips

நான் பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! உயிருக்கு போராடும் விவசாயி மகளின் ஆசை!

tamiltips