Tamil Tips
செய்திகள் முக்கிய செய்திகள்

ரூ.1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ். ரெய்டில் அம்பலம்!

தமிழகத்தில் மிக பெரிய நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் நிறுவனங்களுக்குச் சொந்தமாக இடங்களில் வருமான வரித் துறையினர் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 4- ஆம் தேதி வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 1000 கோடி ரூபாய் வருவாயை மறைத்து வந்தது தெரியவந்தது (IT raid saravana stores ).

புகழ் பெற்ற வணிக வழக்கங்களை கொண்ட சரவணா ஸ்டோர்ஸை முதலில் உருவாக்கிய செல்வரத்தினம் நெல்லையில் பிறந்து சென்னையில் பிழைப்பு தேடி வந்தவர். இங்கு தெரு தெருவாக காபி வியாபாரம் செய்து வந்த சரவண செல்வரத்தினம் தனது கடுமையான முயற்சியால் சரவணா ஸ்டோர்ஸ் என்னும் துணிக்கடை உருவாக்கி அதற்கு தனது இரு சகோதரர்களையும் பங்குதாரர்களாக மாற்றினார். பின்னர் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் தனது கிளைகளை பரப்பி அசைக்க முடியாத சாம்ராஜ்யமாக மாறியது.

இவ்வாறு காபி விற்பனையில் துவங்கி பின் கோடீஸ்வரராக மாறினர். தற்போது சரவணா ஸ்டார் குழுமத்திற்கு சொந்தமாக பல பெயர்களில், பல கடைகள் இயக்கி வந்தாலும். அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் வேறு தான்.

சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி என சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம்  சுமார் 1,000 கோடி ரூபாய் விற்பனை வருவாயை மறைத்து வந்தது தெரியவந்தது.

இந்த நிறுவனம், தங்களுக்குச் சொந்தமான துணிக்கடை, நகைக்கடை, ஃபர்னிச்சர் கடை ஆகிய கடைகளுக்கு தேவையான பொருட்களை கணக்கில் காட்டாமல் ரூ. 150 கோடி அளவில் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல் சரவணா செல்வரத்தினம் நிறுவனம் சுமார் ரூபாய் 80 கோடி அளவிற்கு போலி பில்கள் தயாரித்து அதன் மூலம் பொருட்கள் வாங்கியதும் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Thirukkural

சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் காட்டப்படாத வாடகை ரசீதுகள் மற்றும் ஸ்க்ராப் விற்பனை தொடர்பான ஆவணங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.இவ்விரு நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 10 கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 6 கோடி ரூபாய் மதிப்புடைய நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும், சோதனை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முதல் படத்திலேயே அந்தமாதிரி காட்சிகள்…! தயாரிப்பாளர்களிடம் கண்ணீர் விட்டு புலம்பும் டாக்டர் பட நடிகை…!!!

tamiltips

இந்த அழகான குழந்தை யாருன்னு தெரியுமா? இன்று இவர் முன்னணி நடிகை யாருன்னு பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவிங்க..!!

tamiltips

இந்த குட்டி தேவதையாக இருக்கும் குழந்தை இன்று முன்னணி பிரபல நடிகையாகி விட்டார்..!! யாருன்னு பாருங்க நீங்களே அ திர்ச்சி ஆகிடுவிங்க..!!

tamiltips

நம்ம மீனாட்சி ரக்ஷிதா இதுக்கு அடிமையானவங்களாம்!… இது இல்லாம இருக்க வேமுடியாதாம்!!

tamiltips

மாரடைப்பால் பிரபல நடிகை விந்தியா ம ர ண ம் ?? இணையத்தில் தீ யா ய் பரவும் போஸ்டர் !! நடந்தது இதுதான் !!

tamiltips

என்னாம்மா !! இப்படி தூ க்கி காட்டறீங்க ?? அந்த இடம் தெரியும் அளவுக்கு !! கீர்த்தி ஷெட்டியின் இணையத்தை தி ணறடிக்கும் ஹாட் போட்டோஸ் உள்ளே !!

tamiltips