மருத்துவ குணங்கள்:- குழந்தைகளுக்கு சளியை வெளியேற்றி கோழையகற்றுகிறது. குளிர் காய்ச்சல், இருமல், மார்பு நெரிசல் மற்றும் அஜிரணம் குணப்படுத்த இது ஒரு சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையால் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் முதலியன விலகும்.
இதன் இலைச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்துக் குழந்தைகளுக்கு உண்டாகும் இருமலுக்குக் கொடுக்கலாம். இதன் சாற்றை, சர்க்கரை, நல்லெண்ணெய் இவற்றுடன் சேர்த்து தலைக்கு தடவிவர மூக்கு நீர்ப் பாய்தல் தீரும். இதன் இலைச்சாற்றை நீர் விட்டு சுண்டக் காய்ச்சி 4 கிராம் முதல் 8 கிராம் எடை வரையில் கொடுக்கலாம்.
வாதக்கடுப்பு குணமாக நல்ல தீர்வாகும். இதன் இலைச்சாற்றைக் குழந்தைகளுக்கு கால் முதல் அரைத் தேக் கரண்டியளவு முலைப்பாலோடு சேர்த்துக் கலக்கிக் கொடுக்கலாம். பெரியவர்களுக்கு கால் முதல் அரை அவுன்சு வீதம் சிறிது சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.
இது சீதளத்தினாலுண்டான கபத்தைக் கண்டிக்கும். வியர்வையை உண்டாக்கி உடம்பின் கொதிப்பைத் தணியச் செய்யும். இத்துடன் நல்ல கஸ்தூரி மாத்திரை சேர்த்து கொடுத்தல் மிகவும் நல்லது.
தோல்:- நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, செரி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற் பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும். சில பூச்சிகள் கடிப்பதால் தோலில் இருக்கும் அப்பூச்சியின் நஞ்சையும், தோலில் ஏற்பட்டிருக்கிருக்கும் வீக்கத்தையும் போக்குவதற்கு மேற்கூறப்பட்ட வழிமுறையை பின் பற்றலாம்.
ஆஸ்டியோ பொராஸிஸ்:- இது உடலில் இருக்கும் எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகளை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எலும்புகள், மூட்டுகள் தேய்மானம் அடையவும் செய்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள், மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஓமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த இலைகளை கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள், எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
புற்றுநோய்:- உடலின் அனைத்து பகுதிகளிலும் புற்று நோய் ஏற்படுகிறது. புற்றுநோய்களில் பல வகைகள் உண்டு. இதில் தற்போது உலகளவில் அதிகம் பேர் பாதிக்கப்படும் புற்றுநோய்களாக மார்பக புற்றுநோய் மற்றும் பிராஸ்ரேட் புற்றுநோயும் இருக்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் நிறைந்திருக்கும் ஓமேகா – 6 வேதிப்பொருட்கள் இந்த வகையான புற்று நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக புற்றுநோய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படபடப்பு:- ஒரு சிலர் அவ்வப்போது தேவையற்ற விசயங்களுக்கு எல்லாம் பயம் மற்றும் கவலை கொள்வார்கள். இதனால் அவர்களின் மனதில் ஒரு அமைதியின்மையும், படபடப்பு தன்மையும் ஏற்படும். கற்பூரவள்ளி செடிகளின் இலைகளின் வாசத்தை அடிக்கடி சுவாசிப்பவர்களுக்கு அந்த இலைகளில் இருக்கும் ரசாயண பொருட்கள் நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம் படபடப்பு தன்மை போன்றவற்றை போக்குகிறது.
சிறுநீரகங்கள்:- நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து. அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.
ஜுரம்:- சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாக பலருக்கும் அப்பருவ காலத்தில் ஜுரம் ஏற்படுவது இயற்கையானது தான். இந்த ஜுரத்தை போக்குவதற்கு உடனடியாக ஆங்கில வழி மருந்துகளை நாடுவதற்கு முன்பு சில கற்பூரவள்ளி இலைகளை கசக்கி அதன் துளிகளை உள்ளுக்கு அருந்துவதாலும் நெஞ்சு, கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து கொள்வதாலும் ஜுரம் சீக்கிரம் நீங்கும்.
ஆஸ்துமா:- சுற்றுசூழல் மற்றும் காற்றில் ஏற்படும் மாசுகள் நிறைந்த காற்றை அதிகம் சுவாசிப்பதால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் மூச்சிரைப்பு அதிகம் ஏற்படும். ஆஸ்துமா நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினமும் கற்பூரவள்ளி செடியின் இலைச்சாற்றை பனங்கற்கண்டு தேன் போன்றவற்றோடு கலந்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.
புகைப்பிடித்தல்:- புகைப்பிடித்தல் என்பது ஒரு வகை போதை பழக்கம். இந்த புகைப்பிடிப்பதால் நுரையீரலில் அதிகளவு நச்சுக்கள் சேர்ந்து சுவாசிக்கும் போது சிறிது சிரமத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில் நுரையீரல் புற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.
கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்டக்காய்ச்சி அதில் பாதியளவை நன்கு வடிகட்டி அருந்தி வந்தால் புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுகள், மாசுகள் நீங்கும். நுரையீரல் சம்மந்தமான புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.
அஜீரணம்:- சிலருக்கு சில வகையான உணவுகள் அதிகளவிலும் நேரங்கடந்து சாப்பிடும் போது அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனையும் உருவாகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கற்பூரவள்ளி செடியின் இலைச்சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் உணர்வும் போகும்.கற்பூரவள்ளி இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
நரம்பு மண்டலம்:- நரம்புகளுக்கு சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்மந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும, இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
கற்பூரவள்ளி சூப்:- 5 – கற்பூரவள்ளி இலைகள், 5 – மிளகு, 1 வெற்றிலை கொதிக்க வைத்து அந்த நீரை 60 மில்லி லிட்டர் காலை, மாலை – பருகலாம். குழந்தைகளுக்கு 20-&30 மில்லி லிட்டர் வரை அருந்தி வர நுரையீரல் சளி, ஆஸ்துமா, காசநோய், நாள்பட்ட சளி குணமாகும்.
கற்பூரவள்ளி இலைகளை அரைத்து அதன் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து உட்கொள்ளலாம். ஜலதோஷத்தை தடுக்க கற்பூரவள்ளி பஜ்ஜி செய்து சாப்பிடலாம். கற்பூரவள்ளி இலைகளை கசக்கி சாறு பிழிந்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும். காசநோய், கபக்கட்டு, அம்மைக் கொப்புளம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும். கற்பூரவள்ளி இலைகளை தண்ணீரில் இட்டு ஆவி பிடித்தாலும் நெஞ்சு சளி குணமாகும்.
கற்பூரவள்ளி ஹேர் டை:- ரோஸ்மெரி 15 டேபிள் ஸ்பூன், கற்பூரவல்லி – 5 டேபிள் ஸ்பூன். நீரை நன்றாக கொதிக்க வையுங்கள் கொதிக்கும் போது, ரோஸ்மெரி இலை மற்றும் கற்பூரவல்லி போடவும். 2 நிமிடங்களில் நன்றாக கொதி வந்த பின் அடுப்பை அணைக்கவும். இந்த நீரை 2-3 மணி நேரம் அப்படியே விடவும்.
பயன்படுத்தும் முறை:- நீரை முடி முழுவதும் தடவவும் 2 மணி நேரம் கழித்து விருப்பமிருந்தால் தலைக்கு குளிக்கலாம், இல்லையென்றால் அப்படியே விட்டுவிடலாம். வாரம் 3 முறை பயன்படுத்துங்கள். நல்ல பலன் தரும் நரைமுடிக்கு மட்டுமல்லாமல் முடி உதிர்விற்கும் நல்ல பலன்களை தரும்.