மனிதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய சிக்கல் வறுமையோ, நோய் நொடிகளோ இல்லை. மனக்குழப்பமாக ஆரம்பித்து மன அழுத்தமாக மாறி அதுவே தீராத மனநோயாக உருவெடுத்து விடுகிறது. மன அழுத்தத்திற்கு காரணம், தேவையற்ற சிந்தனை. நடக்காதது நடந்துவிட்டது போல ஒரு பிரம்மை. அளவுக்கு அதிகமான கற்பனை. வீண் பயம் இவைதான் மன அழுத்தத்திற்கு பெரும் காரணங்கள். நோய்களை உண்டாக்கக்கூடிய உடல் அல்லது மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல், இரசாயன அல்லது மனவியல் காரணிகளை மன அழுத்தம் எனக் கருதலாம். அதிர்ச்சி, நோய்தொற்று, விஷம், உடல்நலக் குறைபாடு, காயங்கள் போன்றவற்றை உடலியல் மற்றும் இரசாயன காரணிகளாக கூறலாம். பலவகையான மனவியல் காரணிகள் இருக்கின்றன.
மன அழுத்தத்திற்க்கான முக்கிய காரணங்கள் :
சுற்றுச்சூழல் அழுத்தம் :
- சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தம். அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.
வாழ்வியல் அழுத்தம் :
- தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.
அதிக வேலைப்பளு :
- அதிக நாட்களின் பளு காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது. ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும்
மன அழுத்த விளைவுகள் :
- குழந்தைபருவ அனுபவங்கள்.
- நபர்களின் செயல்முறைகள் பரம்பரையாக வரும், குறிப்பாக மூளையின் முக்கிய இரசாயனமான செரட்டினின் அளவோடு தொடர்புடைய தாமத செயல்பாடு போன்றவை.
- நோய் எதிர்ப்புத்திறனில் வேறுபடுகள்.
- வாழ்க்கைமுறை
- மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தோன்றும் கால அளவு.
மன அழுத்த நோய்கள் :
மனவியல் நோய்களை தீர்க்கும் திட்டமுடிதலுக்கு, அந்நோய்களைப் பற்றிய முழு புரிதலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஒரு நபரின் மன அழுத்த நிலையை, அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசால் மற்றும் ஆகியவற்றை அளப்பதன் மூலம் அறியலாம்.
- வயிற்று நோய்கள்
- போதைக்கு அடிமையாதல்
- ஆஸ்துமா
- களைப்பு
- படபடப்பு, தலைவலி
- இரத்த அழுத்தம்
மன அழுத்த விளைவுகள் :
மன ரீதியான விளைவுகள் :
சரியான முறையில் சிகிச்சை பெறாத போது பலவிதங்களில் வெளிப்படுகின்றன. தீர்க்கப்படாத மனவியல் பிரச்சினைகள் மனநிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கும்.
- தன்னம்பிக்கை இழத்தல்
- அடக்கமுடியாத ஆசைகள்
- கவனம் செலுத்துவதில் சிரமம்
- முடிவெடுப்பதில் சிரமம்
உடல் ரீதியான விளைவுகள் :
பெரும்பாலும் நரம்பு, சுரப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக வெளிப்படுகின்றன. எந்த வகை காரணியால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றுள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- படபடப்பு, அதிகரிக்கும் இதய துடிப்பு
- குளிர் அல்லது வேர்த்து வழிதல்
- ஈரமான புருவப்பகுதி
- அதிகரிக்கும், மேலோட்டமான மூச்சு வாங்குதல்