Tamil Tips
கர்ப்ப பரிசோதனை கர்ப்பம்

வீட்டிலேயே கர்ப்பப் பர்சோதனை செய்து கொள்ள மிக சுலபமான 10 வழிகள்

தாய்மை அடைவது என்பது பெண்ணின் வாழ்க்கையில் ஆனந்தமான தருணமாகும். ஆனால், இதற்கான பாதை நிச்சயமற்றது மற்றும் கடினமாந்து. இந்த நீண்ட பயணத்தின் துவக்கத்தில் கர்ப்ப சோதனை செய்து கொள்வதும் தான். கர்ப்ப சோதனை மேற்கொள்ளும் போது, முடிவு தொடர்பான கவலை உங்களை களைப்படையச்செய்யலாம். மேலும், கர்ப்ப சோதனையை, டாக்டர் ஆய்வு கூடத்தில் மேற்கொள்வதைவிட தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதையே நீங்கள் விரும்பலாம்.

வீட்டிலேயே கர்ப்ப சோதனை செய்து கொள்ள முயற்சிக்கும் போது, மருந்து கடையில் அதற்கான சாதனங்களை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இவற்றின் முடிவுகள் அத்தனை துல்லியமானவை அல்ல என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, நீங்கள் டாக்டர் ஆய்வு கூடத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும் அல்லது வீட்டில் இயற்கையான சோதனைகளை நாட வேண்டும். கடந்த காலங்களில், நம் பாட்டிமார்கள், பாரம்பரிய முறையில், இயற்கை பொருட்களை கொண்டு இதை செய்வார்கள். இது செயல்திறன் மிக்கது மற்றும் பாதுகாப்பானதாகவும் இருந்திருக்கிறது.

இதை மனதில் கொண்டு, வீட்டிலே தனிப்பட்ட முறையில் நீங்களே செய்து பார்க்க கூடிய கர்ப்ப சோதனைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

இயற்கை கர்ப்ப சோதனையின் பலன்கள்

வெகு சிலர் தான் வீட்டிலேயே கர்ப்ப சோதனை செய்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால், இதற்கு தயக்கம் காட்டுபவர்கள் தவற விடக்கூடிய பலன்கள் இதோ:

Thirukkural
 • திட்டமிடாத கர்ப்பத்தை எதிர்நோக்கிய நிலையில், மற்றவர்களுக்கு இது தெரிய வேண்டாம் என நினைக்கும் போது இந்த முறை ஏற்றது.  
 • கர்ப்ப சோதனையை பைசல் செய்வது எளிதல்ல; ஆனால்,இயற்கையான பொருட்களை பயன்படுத்தும் போது இந்த சிக்கல் இல்லை.
 • இதில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் உங்கள் சமையலறையில் இருப்பவை தான்.
 • பார்மசிக்கு பதில் உங்கள் வீட்டிலேயே வசதியாக செய்து கொள்ளலாம்.
 • இயற்கை கர்ப்ப சோதனை செலவு குறைந்தவை.
 • இதில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை அல்ல என்பதால், காலாவதியாவது பற்றி கவலை வேண்டாம்.  

கர்ப்பப் பரிசோதனை செய்முறை

பெண்கள் கருவுரும்போது, அதாவது கரு, கர்ப்ப பை சுவற்றில் ஒட்டிக்கொண்டு, தொப்புள் கொடி உண்டாகி, ஹியூமன் கோரியோனிக் கோனடோடிரோபின் (எசிசிஜி ) ஹார்மோனை உற்பத்தி செய்யத்துவங்கும் போது,இந்த ஹார்மோன் இரத்த ஓட்டம் மற்றும் சிறுநீரில் கலக்கிறது. சிறுநீரில் எசிஜி இருப்பதை கண்டறிய, ஆண்டிபாடிகள் கொண்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

கர்ப்ப சோதனையை எப்போது செய்துகொள்வது என நீங்கள் கேட்கலாம். கர்ப்ப காலத்தின் ஆரம்ப சில வாரங்களில், ஹார்மோன் சுரப்பது அதிகரித்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இரு மடங்காகிறது. கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலத்தில் சோதனை செய்து கொள்ளும் போது கண்டறிவது கடினம். எனவே, மாதவிலக்கைத் தவறவிட்ட பின், ஒரு நாள் கழித்து மேற்கொள்ளலாம்.

சோதனையில் நீங்கள் கர்ப்பமாகவில்லை என வந்தால், ஒவ்வொரு பெண்ணும் மாதத்தின் வேறு வேறு காலத்தில் மாதவிலக்கு சுழற்சி பெறுவதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கு சீரற்ற மாதவிலக்கு சுழற்சி இருந்தால், நீங்கள் மாதவிலக்கு நாளைத் தவறாகக் கணக்கிட்டிருக்கலாம். இதனால் முடிவு வேறு விதமாக அமையவும் வாய்ப்பிருக்கிறது. 

கர்ப்பப் பரிசோதனை முடிவின் துல்லியத்திற்கான வழிகள்  

 • சிறுநீர் மாதிரியைச் சேகரிக்க, சுத்தமான பாட்டிலை பயன்படுத்தவும்.  
 • நாளின் முதல் சிறுநீரைப் பயன்படுத்தவும். அதில் அதிக அளவு எச்சிஜி உள்ளது. அது குறைவாக இருந்தால் முடிவு மாறுபடலாம்.
 • போதுமான சிறுநீர் சேகரிக்கப்படுவதை உறுதி செய்யவும். அது குறைவாக இருந்தாலும், முடிவு மாறுபடலாம்.
 • சோதனை முடித்தவுடன் வினையாக்கம் நடைபெறக் காத்திருக்கவும். இதற்கு 10 நிமிடங்கள் ஆகலாம்.
 • துல்லியமான முடிவு கிடைக்கவில்லை எனில், மீண்டும் ஒரு முயன்று பார்க்கவும்.

10 கர்ப்பப் பரிசோதனைகள்

வீட்டிலேயே கர்ப்ப சோதனை செய்து கொள்வது எப்படி எனும் கேள்வி இப்போது உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே கர்ப்பத்தை கண்டறிவதற்கான வழிகள் இதோ:  

1. உப்பு சுய கர்ப்பப் பரிசோதனை

எல்லா சமையலறையிலும் உப்பு தவறாமல் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், காலையில் சிறுநீர் மாதிரி எடுத்து, அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

செயல்முறைசாதகமான அறிகுறிஎதிர்மறை அறிகுறி
கண்ணாடி பாட்டிலில் சிறுநீர் மாதிரி சேர்த்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் காத்திருக்கவும்.  நீங்கள் கர்ப்பமாக இருந்தால், கொழ கொழப்பான வெள்ளை கட்டிகள் உண்டாகி இருப்பதை பார்க்கலாம்.  சிறுநீர் மற்றும் உப்பு இடையே எந்த எதிர்வினையும் ஏற்படவில்லை எனில் நீங்கள் கர்ப்பமாகவில்லை என பொருள்.  

2. சர்க்கை கர்ப்பப் பரிசோதனை

சர்க்கரை, வீட்டில் நீங்கள் எப்போதும் வைத்திருக்கும் பொருள். இதன் காரணமாகவே இந்த சோதனை மிகவும் எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், சிறுநீர் மாதிரி சேகரித்து, அதில் கொஞ்சம் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

செயல்முறைசாதகமான அறுகுறிஎதிர்மறை அறிகுறி
பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அதில் சிறுநீரை ஊற்றவும்.சிறுநீரில் உள்ள எச்சிஜி, எளிதாக சர்க்கரையை சிறுநீரில கரைய விடாது. சர்க்கரை கட்டியாக சேர்வதை பார்த்தால், நீங்கள் கர்ப்பம் என கொள்ளலாம்.  சிறுநீரில் சர்க்கரை உடனடியாக கலந்துவிட்டால் நீங்கள் கர்ப்பமாக இல்லை என கொள்ளலாம்.

3. பற்பசை கர்ப்பப் பரிசோதனை

நம்முடைய பாட்டிமார்கள் காலத்தில் பற்பசை எளிதாகக் கிடைக்கவில்லை என்பதால், இந்தப் பரிசோதனை வீட்டிலேயே செய்யக்கூடிய சோதனைகள் பட்டியலில் இப்போது சேர்ந்திருக்கிறது. இந்த பரிசோதனையில் துல்லியமான முடிவுக்கு நீங்கள் வெள்ளை பற்பசை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வண்ண பற்பசையில் உள்ள கூடுதல் ரசாயனங்கள் முடிவை பாதிக்கலாம். ஒரு தூய்மையான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் காலையில் சேகரித்த சிறுநீர் மற்றும் இரண்டு ஸ்பூன் பற்பசையை சேர்க்கவும்.  

செயல்முறைசாதகமான அறிகுறிஎதிர்மறை அறிகுறி
ஒரு பாத்திரத்தில், சிறுநீர் மற்றும் இரண்டு ஸ்பூன் பற்பசையைக் கலக்கவும்.  பற்பசை நீலமாகவும், நுரையாகவும் மாறினால் நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்.பற்பசை, சிறுநீருடன் வினை செய்யாவிட்டால், நீங்கள் கரப்பாமக இல்லை என பொருள்.

குறிப்பு: இந்தச் சோதனை செயல்திறன் மிக்கது என்றாலும், பற்பசையுடன் சேர்க்க வேண்டிய சிறுநீர் அளவு மற்றும் எவ்வளவு நேரம் தேவை என்பது சரியாக தெரியாது என்பதால் இந்த முறை அத்தனை உகந்தது இல்லை.

4. சோப் கர்ப்பப் பரிசோதனை

இது மிகவும் எளிதானது, வீட்டிலேயே எளிதாக மேற்கொள்ளலாம். சோப் மட்டும் தான் தேவை. எந்த வகை சோப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதோடு பெரிய பாத்திரம் மற்றும் சிறுநீர் மாதிரி தேவை.

செயல்முறைசாதகமான அறிகுறிஎதிர்மறை அறிகுறி
அகலமான பாத்திரத்தில் சோப்பை வைத்து, அதில் இரண்டு ஸ்பூன் சிறுநீரை ஊற்றவும்.  சோப் எதிர்வினை செய்து, குமிழ்கள் மற்றும் நுரையை உருவாக்கினால் நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்.  எந்த எதிர்வினையும் இல்லை எனில், நீங்கள் கர்ப்பமாக இல்லை எனக் கொள்ளலாம்.

5. ஷாம்பு கர்ப்பப் பரிசோதனை

இதுவும் சோப் மற்றும் பற்பசை சோதனை போல எளிதானது. எந்த ஷாம்புவையும் பயன்படுத்தலாம். இதற்காக வேறு எந்த சாதனமும் தேவையில்லை. உங்களுக்கு தேவை எல்லாம் தண்ணீர், ஷாம்பு, காலையில் சேகரித்த சிறுநீர் மற்றும் தூய்மையான பாத்திரம் தான்.

செயல்முறைசாதகமான அறிகுறிஎதிர்மறை அறிகுறி
பாத்திரத்தில் இரண்டு சொட்டு ஷாம்பு மற்றும் தண்ணீரை கலக்கவும். நுரை வராமல் இருக்கச்செய்து, சிறுநீர் சேர்த்து காத்திருக்கவும்.ஷாம்பு எதிர்வினை செய்து, குமிழ் மற்றும் நுரை வந்தால், நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்.எந்த எதிர்வினையும் இல்லை எனில், நீங்கள் கர்ப்பமாக இல்லை என கொள்ளலாம்.

குறிப்பு: ஷாம்பு மற்றும் தண்ணீரை கலக்கும் போது கவனம் தேவை. நுரை வராத அளவு மெல்ல கலக்கவும். ஏனெனில் இது சோதனை முடிவை பாதிக்கும்.  

6. டெட்டால் கர்ப்பப் பரிசோதனை

டெட்டால் பெரும்பாலான இந்திய இல்லங்களில் இருப்பது. இதை நாம் பல விதங்களில் பயன்படுத்துகிறோம். இதை கர்ப்ப சோதனைக்கும் பயன்படுத்தலாம் தெரியுமா? ஒரு கண்ணாடி பாட்டில், ஒரு ஸ்பூன் டெட்டால், காலையில் எடுத்த சிறுநீர் மாதிரி தேவை.

செயல்முறைசாதகமான அறிகுறிஎதிர்மறை அறிகுறி
ஒரு ஸ்பூன் டெட்டாலை மூன்று பங்கு சிறுநீருடம் கலக்கவும். 1:3 விகிதத்தில் இருக்க வேண்டும். 5 முதல் 7 நிமிடம் காத்திருக்கவும்.உங்கள் சிறுநீர் தனியே பிரிந்து, டெட்டால் மீது படர்ந்தால், நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்.  சிறுநீர் மற்றும் டெட்டால் கலந்து, தனியே படரவில்லை எனில், நீங்கள் கர்ப்பமாகவில்லை என பொருள்.

7. வினிகர் கர்ப்பப் பரிசோதனை

வினிகர், உணவுப் பொருட்களுக்கு நறுமணம் சேர்ப்பதோடு, நீங்களே செய்து கொள்ளக்கூடிய கர்ப்ப சோதனையிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த சோதனைக்காக, கடைகளில் கிடைக்கும் வெள்ளை வினிகரை நீங்கள் பயன்படுத்தலாம். மேலும், தூய்மையான பாட்டில் மற்றும் காலையின் முதல் சிறுநீர் மாதிரி தேவை. the two.

செயல்முறைசாதகமான அறிகுறிஎதிர்மறை அறிகுறி
தூய்மையான கண்ணாடி பாட்டிலுல் வினிகர் எடுத்துக்கொண்டு, அதில் மெல்ல சிறுநீர் மாதிரியை சேர்க்கவும்.  கர்ப்பம் எனில்,இந்த கலைவையின் நிறம் மாறுவதை பார்க்கலாம்.   கலைவையில் எந்த எதிர்வினையும் இல்லை எனில் நீங்கள் கர்ப்பம் இல்லை என பொருள்

8. பிளீச்சிங் பவுடர் கர்ப்பப் பரிசோதனை

எளிய முறையில், விரைவாக முடிவு தெரிய வேண்டும் எனில், பிளீச்சிங் பவுடர் ஏற்றது. இந்த சோதனைக்கு, பிளீச்சிங் பவுடர், தூய கண்ணாடி பாட்டில், காலையின் முதல் சிறுநீர் மாதிரி தேவை.

செயல்முறைசாதகமான அறிகுறிஎதிர்மறை அறிகுறி
கண்ணாடி பாட்டிலில் பிளீச்சிங் பவுடர் போட்டு, அதன் மீது சிறுநீர் மாதிரியை ஊற்றவும்.  இரண்டும் கலந்ததும், குமிழ்கள் மற்றும் நுரை போன்றவை உண்டானால், நீங்கள் கர்ப்பம் என பொருள்.   குமிழ்கள், நுரை வரவில்லை எனில், கர்ப்பம் ஆகவில்லை என பொருள்.

குறிப்பு: இந்த வினையின் போது உண்டாக கூடிய புகையை சுவாசிக்க வேண்டாம். அது நச்சுத்தன்மை கொண்டது. எனவே பாதுகாப்பான தொலைவில் வைத்திருக்கவும்.  

9. பேக்கிங் சோடா கர்ப்பப் பரிசோதனை

சமையலறையில் பேக்கி சோடாவை பலவற்றுக்காக பயன்படுத்துகிறோம். அதே போல, கர்ப்பம் அறியும் சோதனையில் பயன்படுத்தலாம்.  

செயல்முறைசாதகமான அறிகுறிஎதிர்மறையான அறிகுறி
கோப்பையில், பேக்கிங் சோடா சேர்த்து, சிறுநீர் மாதிரியை சேர்க்கவும்.  இரண்டும் கால்ந்து குமிழ்கள், மற்றும் நுரை உண்டானால், நீங்கள் கர்ப்பம் என பொருள்.  எந்த எதிர்வினையும், இல்லாமல் கலைவை அடியில் தங்கினால், கர்ப்பம் இல்லை என பொருள்.

10. கோதுமை & பார்லி கர்ப்பப் பரிசோதனை

கோதுமை மற்றும் பார்லி, ஒவ்வொரு இந்தியரின் உணவு அமைப்பிலும் இடம்பெறுவது. இவற்றை, கர்ப்பம் கண்டறியும் சோதனையிலும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா? இரண்டின் விதைகளுமே, தண்ணீரைவிட கர்ப்பமான பெண் சிறுநீரில் சிக்கிரம் முளை விடுகின்றன. இந்த சோதனைக்கு, கொஞ்சம் பார்லி, கோதுமை, தூய்மையான கோப்பை மற்றும் சிறுநீர் மாதிரி தேவை.

செய்முறைசாதகமான அறிகுறிஎதிர்மறை அறிகுறி
ஒரு கோப்பையில், சிறுநீர் மாதிரி எடுத்து, அதில் பார்லி மற்றும் கோதுமை விதைகளை போடவும். இரண்டு நாட்கள் காத்திருக்கவும்.இரண்டு நாட்களில் விதைகள் முளைத்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்க வேண்டும்.  விதைகள் முளைக்கவில்லை எனில், நீங்கள் கர்ப்பம் இல்லை.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிசேரியனுக்கு பிறகு தாய்மார்கள் விரைவில் குணமடைய 24 டிப்ஸ்…

tamiltips

வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?!

tamiltips

கருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது எப்படி?

tamiltips

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…

tamiltips

அற்புத மருந்து கழற்சிக்காய் நன்மைகள்- Kalarchikai

tamiltips

சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…

tamiltips