Tamil Tips
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம் பெண்கள் நலன்

‘டவுன் சிண்ட்ரோம்’ – நோயல்ல, குறைபாடு! கருவில் கண்டுபிடிக்க முடியுமா?

டவுன் சிண்ட்ரோம் நோய் அல்ல. இது ஒரு மனநலிவு குரோமோசோம் குறைபாடு. இதை கருவில் கண்டுபிடிக்க முடியுமா? இது தாக்குவதற்கான காரணங்கள், அதற்கான அறிகுறிகள், தாக்கத்திற்கு ஆளானவர்களின் குணாதிசயங்கள், பரிசோதனைகள் பற்றிய தகவல்களை இங்கே தெளிவாக தெரிந்து கொள்ளலாம்..

எதனால் டவுன் சிண்ட்ரோம் குறைபாடு ஏற்படுகிறது?

டவுன் சிண்ட்ரோம் குறைபாடு ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்பட்டுவிடுகின்றது. பொதுவாக உடலின் செல்களில் 46 குரோமோசம்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.  ஆனால் இந்த குறைபாடிற்கு ஆளானவர்களுக்கு 21ஆவது ஜோடி குரோமோசோம்களில் கூடுதலாக ஒரு குரோமோசோம் இடம் பெற்றுவிடும். ஆக குறைபாடு தாக்கத்திற்கு ஆளானவர்களின் உடம்பில் 46 குரோமோசோம் என்று சரியான எண்ணிக்கைக்கு மாறாக 47 குரோமோசோம்கள் காணப்படும். இந்த மரபணு குறைபாடே டவுன் சின்ட்ரோம் என்னும் குறைபாடிற்குக் காரணமாகும். இந்த குறைபாட்டிற்கு ஆளானவர்களிடம் மனவளர்ச்சியின்மைக் காணப்படுகிறது.

டவுன் சிண்ட்ரோம் குறைபாடு வர வேறு காரணங்கள்

இது தவிர டவுன்சிண்ட்ரோம் ஏற்பட வேறு என்னென்ன காரணங்கள் என்ன என்பதைக் கீழே அறிந்து கொள்வோம்.

உணவுப் பழக்கங்கள்

இன்று பெரும்பாலானவர்கள் சிறந்த உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பது கிடையாது. கடையில் விற்கப்படும் துரித உணவுகள், பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள், நொறுக்குத் தீனிகள் என்று கிடைக்கும் உணவுகளை எல்லாம் எடுத்துக் கொள்கின்றனர். இவை அனைத்தும் சுவையை மட்டுமே தரும் வழியே எந்த விதமான ஆரோக்கிய நலன்களைத் தராது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வகை பழக்க முறைகள் கூட ‘டவுன் சிண்ட்ரோம்’ ஏற்படக் காரணமாக அமைந்து விடுகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

இன்று சுத்தமான காற்றைச் சுவாசிப்பது அரிதாகிவிட்டது. மரங்கள் குறைந்து விட்டன. வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அதனால் காற்று மிகவும் மாசடைந்து கிடக்கின்றது. இதனைத் தொடர்ச்சியாகச் சுவாசிப்பதும் டவுன் சிண்ட்ரோம் வர மறைமுக காரணியாக இருக்கலாம்.

Thirukkural

தூக்கமின்மை

ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 6 மணி நேரம் தூங்க வேண்டும். அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று பெரும்பாலானவர்கள் நள்ளிரவு தாண்டி தான் உறங்குகின்றனர். மொபைல் மற்றும் டிவி அவர்களின் தூக்க நேரத்தை ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டன. இதுவும் மரபணு கோளாறுக்கான காரணியாக அமைகின்றது.

இதையும் படிங்க: 0-2 வயது வரை- குழந்தை வளர்ச்சி எப்படி இருக்கவேண்டும்?

புகைப் பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

இந்த இரண்டு தீய பழக்கங்களும் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கும். அந்த வகையில் மரபணு குறைபாடான டவுன் சிண்ட்ரோம் தாக்கத்திற்கும் இதுவும் காரணியாக அமைகின்றது.

டவுன் சிண்ட்ரோம்/மனநலிவு குறைபாடு அறிகுறிகள்

டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பல்வேறு அறிகுறிகள் காணப்படும். அவை என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.

 • கண்கள் சற்று பெரியதாக இருக்கும் அல்லது மாறு கண் போன்ற அமைப்போடு இருக்கும்.
 • முன் நெற்றி வழக்கத்தை விடச் சற்று அகலமாகக் காணப்படும்.
 • வாய் பாதி மூடியது போலத் தோற்றத்தில் இருக்கும்.
 • தாடையின் அளவு சிறியதாக இருக்கும்.
 • பல் வரிசை ஒழுங்கில்லாமல் அமைந்திருக்கும்.
 • கண் இமைகள் சீராக இருக்காது.
 • உயரம் 5 அடிக்கு அதிகமாக இருக்காது.

குறைபாடு தாக்கங்கள்

டவுன் சிண்ட்ரோம் குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன நோய் தாக்க வாய்ப்பு உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

 • இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும்.அதனால் பல்வேறு விதமான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 • தைராய்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.மூளை மற்றும் உடலின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு தைராக்சின் ஹார்மோன் இன்றியமையாதது. ஆனால் இந்த குறைபாடு தாக்கத்தால் இவர்களுக்கு தைராக்சின் ஹார்மோன் சுரக்காமல் போகும் நிலை உள்ளது.
 • நுரையீரலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 • காக்காய் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
 • வயிற்றுக் குடல் பகுதியில் கோளாறு வரும் சூழல் உள்ளது.
 • இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது.
 • மலச்சிக்கல் ஏற்படுகிறது.
 • இதயம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றது.

இதையும் படிங்க: நல்ல ஆரோக்கியமான குழந்தை எப்படி இருக்கும்?

டவுன் சிண்ட்ரோம் குறைபாடால் ஐ கியூ அளவீடுகள்:

 1. ஒரு சராசரி மனிதனுக்கு 70 முதல் 130 என்ற அளவுகோலில் ஐ கியூ லெவல் இருக்கும். டவுன் சிண்ட்ரோம் நோயால் தாக்குண்டு குழந்தைகளின் ஐ கியூ லெவல் ஆனது 50 முதல் 70 வரை என்ற அளவீட்டில் உள்ளது.
 2. குறைபாடு தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு 50 என்ற அளவிலேயே ஐ கியூ லெவல் உள்ளது.இந்த வகை குழந்தைகளுக்கு எட்டு வயதுக் குழந்தைக்குரிய அறிவே உள்ளது.இந்த நிலையை இந்த வகை குழந்தைகள் ஆயுள் முழுதும் சந்திக்க வேண்டியதாக உள்ளது.
 3. குறைபாடு தாக்கம் சற்று குறைவாக உள்ள குழந்தைகளுக்கு 70 என்ற ரீதியில் ஐ கியூ லெவல் இருக்கும்.இவர்கள் சராசரியான குழந்தைகள் போல நடந்து கொள்வார்கள்.இருப்பினும் அவர்களின் உடல் தோற்றம் நோய் அறிகுறியை வெளிப்படுத்தும். கூடுதலாக டவுன் சிண்ட்ரோம் தாக்கத்தால் ஏற்படும் சில உடல் சார்ந்த பிரச்சனைகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும்.

பழக்கவழக்கங்கள்

இவர்களின் பழக்கவழக்கங்கள் எவ்வாறு உள்ளன என்று அறிந்து கொள்ளலாம்.

 • டவுன் சிண்ட்ரோம் குறைபாடிற்கு ஆளான குழந்தைகளில் சிலர் மிகவும் சுறுசுறுப்பாகவும் அன்புடனும் இருப்பார்கள்.
 • அதேசமயம் இதன் தாக்கத்திற்கு ஆளான குழந்தைகளில் சிலர் அதிக கோபம் கொள்வார்கள்.யாரிடமும் முகம் கொடுத்துப் பழக மாட்டார்கள்.
 • இந்த வகை குழந்தைகளைப் பராமரிப்பது ஒரு தனி கலை. அவர்களிடம் தனித்துவமான திறமைகள் ஒளிந்திருக்கும். அதைப் பெற்றோர்கள் கண்டுபிடித்து அதற்குரிய பயிற்சிகளைத் தர முனைய வேண்டும்.இதனால் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாய்ப்பு ஏற்படும்.
 • இதன் தாக்கத்தின் அளவு சற்று குறைவாக உள்ள குழந்தைகள் வளர்ந்து இளம் பிராயத்தை எட்டும்போது, அவர்களுக்கு இயல்பான பாலுணர்வு ஏற்படுகின்றது.

இந்த குறைபாடு தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கென்று சிறப்புப் பள்ளிகள் இருக்கின்றன.இருப்பினும் இவர்களை வேற்றுமைப்படுத்துவதை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை. சராசரி பள்ளிகளில் இவர்களை படிக்க அனுமதிக்கலாம் என்று கூறுகின்றனர்.

டவுன் சிண்ட்ரோமைக் குணப்படுத்த இயலுமா?

டவுன் சிண்ட்ரோம் பூரணமாக குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். இந்த குறைபாட்டைப் பூரணமாகக் குணப்படுத்த வாய்ப்பு இல்லை. இருப்பினும் அவ்வப்போது உரியச் சிகிச்சைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தைராய்டு சோதனை மற்றும் மற்ற சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

டவுன் சிண்ட்ரோமின் மிதமான தாக்கத்திற்கு ஆளானவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பாதிப்பிற்கு ஆளான ஆணாே பெண்ணோ வாலிப பருவத்தை எட்டிய பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம். இது மாதிரியான மிதமான பாதிப்பிற்கு ஆளான பலர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த குறைபாடு ஒரு பரம்பரை வியாதி கிடையாது. அதனால் இவர்கள் தாராளமாக இல்லறம் மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இவர்களின் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு வர வாய்ப்பு கிடையாது.

கருவிலே இந்நோயை அறிய உதவும் பரிசோதனைகள்:

என்னென்ன சோதனைகள் மூலம் முன்கூட்டியே கருவில் வளரும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் குறைபாடு தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய முடியும் என்று பார்க்கலாம்.தாயின் வயிற்றில் கருவாகக் குழந்தை இருக்கும் பொழுது இதன் தாக்கத்தைக் கண்டறிய இயலும்.கர்ப்பிணிப் பெண்கள் ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் நல்லது.

இரத்தப் பரிசோதனை

கர்ப்பிணிப் பெண்ணின் இரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்வதன் மூலம் இந்த குறைபாடு தாக்கத்தை அறிய இயலும்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

இந்த சோதனை மூலமும் தாக்கத்தைக் கண்டுபிடிக்க இயலும். இந்த அதிநவீன ஸ்கேன் கருவியைக் கொண்டு குழந்தையின் மூளை வளர்ச்சியைச் சோதனை செய்ய இயலும்.

அம்னியோசென்டசிஸ்

ஒரு பெண் கருவுற்ற 10-வது வாரம் இதற்கான சோதனை மேற்கொள்ளப் படுகின்றது.இந்த பரிசோதனையின் பெயர் அம்னியோசென்டசிஸ்(amniocentesis).இந்த பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.கருவறையில் குழந்தை மிதந்து கொண்டிருக்கும் திரவத்தில் சிறிதளவை ஊசியால் எடுத்து உரியப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் குரோமோசோன் அளவு கண்டு பிடிக்கப்படுகிறது. இந்த பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அல்லது இல்லையா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.இந்த பரிசோதனைக்கான செலவு சற்று கூடுதலாகவே உள்ளது. அதனால் சில பெற்றோர்கள் இந்த பரிசோதனையைத் தவிர்த்துவிடுகின்றனர்.

ஆனால் இந்த மாதிரி கருவில் வளரும் குழந்தைகளுக்கு டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைச் சோதனையில் உறுதி செய்து கொண்ட பல பெற்றோர்கள் குழந்தைகளைக் கருவிலே களைத்து விடுகின்றனர்.இது ஒரு வேதனையான உண்மை.சற்று தாமதமான வயதில் கர்ப்பம் தரிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.அதனால் பெண்கள் உரிய வயதில் கர்ப்பம் தரிப்பது ஏற்புடையது.

டவுன் சிண்ட்ரோம் குறைபாடு பற்றியும் அது தாக்குவதற்கான காரணங்கள்,அதன் அறிகுறிகள்,இதன் தாக்கத்திற்கு ஆளானவர்களின் குணாதிசயங்கள், பரிசோதனைகள் பற்றியும் மற்றும் மேலும் பல தகவல்கள் பற்றியும் தெளிவாக அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

Read Also: ஹீமோகுளோபின் என்றால் என்ன?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அறிவை உயர்த்துவதில் உணவின் பங்கு என்ன? 10 சிறந்த உணவுகள்…

tamiltips

கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை…

tamiltips

6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்

tamiltips

ஒரே மாதத்தில் பளபளப்பான சருமம்… 10 புதுமையான இயற்கை சிகிச்சைகள்…

tamiltips

கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் 30 வகை உணவுகள்

tamiltips

கரு பத்திரமாக இருக்க கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்ய கூடாது?

tamiltips