புதுக்கோட்டை மாவட்டம், வணக்கங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் துரையரசன். இவர், பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1151 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், கட் ஆஃப் மார்க் குறைவாக இருந்ததால், இவருக்கு அரசு மருத்துவக் கல்லூரி சீட் கிடைக்காமல் போனது. இதையடுத்து, கவுன்சலிங் மூலமாக, காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரியில் துரையரசனுக்கு சீட் கிடைத்தது. மிகவும் கஷ்டப்பட்டு, ஆண்டுதோறும் ரூ.3.50 லட்சம் செலுத்தி, அவர் மருத்துவப் படிப்பை படித்து வந்தார்.
முதலாண்டு படிப்பு முடிந்த நிலையில், அவர் படித்து வந்த அன்னை மருத்துவக் கல்லூரியை இந்திய மருத்துவக் கழகம் மூட உத்தரவிட்டது. இதனால், துரையரசன் போன்ற 144 மாணவர்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவே, அரசுக் கல்லூரிகளில் இவர்களை சேர்த்துக் கொள்ளும்படி, நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டிய அதே கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்தும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 2வது ஆண்டு படிப்பையும் கஷ்டப்பட்டு, கட்டணம் செலுத்தி துரையரசன் முடித்துவிட்டார். தற்போது, 3ம் ஆண்டு படிக்கப் போகிறார். ஆனால், ரூ.3.50 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த தொகையை திரட்ட முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறார். இவருக்குஉதவும் வகையில், Edudharma.com என்ற அமைப்பு, நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த மாணவருக்கு யாரேனும் உதவ விரும்பினால், https://www.edudharma.com/fundraiser/durai-mbbs-education எனும் லிங்க் சென்று, உங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக தரலாம் அல்லது உங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த செய்தியை பகிர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.