Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பெற்றோர் கவனத்திற்கு! கோ எஜூகேசன் பள்ளிகளின் அதிர வைக்கும் பிளஸ் டூ தேர்ச்சி முடிவுகள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் இந்த தேர்வு முடிவுகள் மூலம் மற்றொரு உணமையும் வெளியாகியுள்ளது. 

மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளை விட, மாணவர் – மாணவியர் என இரு பாலரும் படிக்கும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதுதான் அது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் : பெண்கள் பள்ளிகள் 93.75%; இரு பாலர் பள்ளிகள் 91.67 சதவீதம்; ஆண்கள் பள்ளிகள் 83.47% மட்டுமே 

இதற்கு உளவியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. மாணவிகள் முன்னிலையில் கல்வி கற்காமல் அவமானப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாக இயல்பாக மாணவர்கள் ஆர்வத்தோடு படிப்பதற்கான வாய்ப்பு, இரு  பாலர் பள்ளிகளில்தான் இருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

பெண்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், அதிக அளவில் இருக்கக் காரணம், ஆண் நண்பர்கள் தொடர்பான கவனச்சிதறல்கள் இல்லாதது, பெண்கள் நடுவேயான போட்டி மனப்பான்மை போன்றவை காரணமாக கூறப்படுகிறது. 

மாணவர்கள் மட்டுமே பயிலக்கூடிய பள்ளிகள் அவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கிறது என்பது புள்ளிவிவரத்துடன் உறுதியாகி உள்ளதால், இருபாலர் பயிலும் பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் களைப்பு இல்லாம, சூப்பர்மேன் போல சுறுசுறுப்பா இருக்கணுமா? அப்ப எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுங்க!

tamiltips

பெண்கள் கவனத்திற்கு! பேஸ்புக் ஃபேக் ஐடியை கண்டுபிடிப்பது இப்படித்தான்!

tamiltips

இருட்டுக்குப் பயப்படும் குழந்தையை எப்படி சரிப்படுத்துவது??

tamiltips

தோப்புக்கரணம் போட்டால் மூளைக்கு அளவில்லா அற்புத நன்மைகள்!

tamiltips

இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

tamiltips

குழந்தைகள் சருமத்திற்கு தீங்கு! ஜான்சன் & ஜான்சன் ஷாம்பூவுக்கு அதிரடி தடை!

tamiltips