பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் 106வது இந்திய அறிவியல் மாநாடு
நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
பேசியதாவது: தற்போது பஞ்சாப்பில் ஒரு நபர் காரை வேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திவிடுகிறார்.
இந்த விபத்தில் நான்கு பேர் பலியாகிவிடுகிறார்கள். ஆனால் விபத்தை ஏற்படுத்திய நபர்
தப்பித்து விடுகிறார்.
அந்த நபரை கண்டுபிடித்து
லைசென்சை போலீசார் ரத்து செய்து விடுகிறார்கள். ஆனால் அதே நபர் வேறு ஒரு மாநிலத்திற்கு
சென்று தற்காலிகமாக ஒரு முகவரியை உருவாக்கி அந்த மாநிலத்தில் லைசென்ஸ் எடுப்பதற்கான
வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அந்த நபர் வேறு விபத்தை ஏற்படுத்தி மேலும் சிலரை பலியாக்குவதற்கான
வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
இதற்கு தான் லைசென்சுடன்
ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. லைசென்சுடன் ஆதாரை இணைப்பதை
கட்டாயமாக்கினால் விபத்தை ஏற்படுத்தும் நபரின் லைசென்சில் அது குறித்த தகவல்களை பதிவு
செய்துவிட முடியும். மேலும் ஒரு முறை ஒரு காரணத்திற்காக ஒரு மாநிலத்தில் லைசென்ஸ் ரத்து
செய்யப்பட்டுவிட்டால், அந்த நபர் வேறு எந்த மாநிலத்திற்கும் சென்று லைசன்ஸ் எடுக்க
முடியாது.
பீகாரில் விபத்தை
ஏற்படுத்திய நபரின் லைசென்ஸ் ரத்தாகிவிட்டால் அந்த நபர் ஜார்கண்டில் சென்று லைசென்ஸ்
எடுக்க முடியும். ஆனால் ஆதாருடன் லைசென்ஸ் இணைக்கப்பட்டுவிட்டால், புதிதாக லைசென்சுக்கு
அந்த நபர் முயற்சிக்கும் போது ஆதார் எண் மூலம் அந்த நபருக்கு ஏற்கனவே லைசென்ஸ் இருந்து
ரத்தாகியுள்ளது தெரியவந்துவிடும். இதன் மூலம் விபத்தை ஏற்படுத்துவர்களை மாநிலம் மாநிலமாக
சென்று லைசென்ஸ் எடுப்பதை தடுக்க முடியும்.
மேலும் புதிததாக லைசென்ஸ்
எடுப்பவர்களும் கூட ஆதாரை கொடுக்கும் போது அவர்களுக்கு வேறு எங்கும் லைசென்ஸ் இல்லை
என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். லைசென்சுக்கு ஆதாரை கட்டாயமாக்கும்
சட்டம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விரைவில் அந்த சட்டத்தை நிறைவேற்ற
உள்ளோம். இதன் மூலம் லைசென்சுக்கு ஆதார் கட்டாயமாகும்.
இவ்வாறு ரவிசங்கர்
பிரசாத் பேசியுள்ளார்.