Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பா வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டே ஆகணும்!

மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும். வெண்டைக்காய் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. வளரும் சிறார்களுக்கு வெண்டைக்காய் மிக அவசியம். புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  40 வயதுக்கு மேற்பட்டவர்கள் நினைவாற்றலை அதிகரிக்க மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சில மாத்திரைகளை சாப்பிடுவது தவறு. இயற்கையான உணவான வெண்டைக்காய் மூலம் நினைவுத் திறனை மேம்படுத்தலாம்.  

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.  இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.  வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். இதில் உள்ள பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது.  

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது. தவிர இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது.  வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எத்தனை கப் காபி குடிப்பது நல்லது??

tamiltips

ரூ.1500ல் குளுகுளு ஏசி! கோவை இளைஞரின் சாதனை கண்டுபிடிப்பு!

tamiltips

உடல் கடிகாரம் தெரியுமா? இதை மட்டும் கடைபிடிச்சா டாக்டரை பார்க்க வேண்டியதே இல்லை தெரியுமா?

tamiltips

கருவேப்பிலையை தட்டிலிருந்து வெளியே வைக்காதிங்க!! புற்று நோய்க்கு மருந்து அது!

tamiltips

எத்தனை வகை வடை இருந்தாலும் இந்த ரச வடைக்கு தனி ருசிதான்!!!

tamiltips

குழந்தை பிறப்புக்குப் பிறகு எடை குறைக்க மூன்றே வழிகள்!

tamiltips