Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்நாடகாவின் சிறப்பு சுற்றுலா அம்சங்கள்! ஊர் சுற்றலாம் வாங்க! பகுதி – 2

டூர் ஐட்டனரி

நான்காம் நாள் காலை மே 18 சனிக்கிழமை அன்று நாம் மங்களாதேவியை தொழுவோம். 

சென்னியம்மன் காவல் தெய்வமாக உள்ள ஊர் தான் சென்னை. அதாவது பாரிஸ் தம்புச்செட்டி  தெருவில் உள்ள காளிகாம்பாளின் தமிழ் பெயர் சென்னியம்மன். மும்பா தேவி காவல்தெய்வமாக உள்ள ஊர் மும்பை. 

காளி  காவல்தெய்வமாக உள்ள ஊர் காளிகாட் என்னும் கல்கத்தா. அதேபோல் நம் வாழ்வில் மங்களங்களை மட்டுமே தரும் மங்களாதேவி காவல்தெய்வமாக விளங்கும் ஊர் தான் மங்களூர்.  இந்த மங்களாதேவியை ஒருமுறை நாம் தரிசித்தாலே வாழ்வில்  நமக்கு பல்வேறு மங்களங்கள் வரும். அதன் பின்னர் நம் வாழ்வில் என்றும்,எப்பொழுதும் ஏறுமுகம் தான். 

ஏறுமுகம் தரும்  9] மங்களாதேவி கோவில்  கோரக்கர் வழிபட்ட  10] கோக்கரநாதேஸ்வரா சிவன் கோவில் முதலான கோவில்களை நாம் தரிசித்த பின்னர் மங்களூர் டூ உடுப்பி 56 கிலோமீட்டர்  பயணம் 

Thirukkural

 11]உடுப்பி கிருஷ்ணர் கோவிலையும், 12] உடுப்பி தர்மசாலா சிவன் கோவிலையும் தரிசிப்போம். இரண்டு கோவில்களும் பலநூறாண்டுகள் பழமை வாய்ந்த பல சுவாரஸ்யமான வரலாறுகளை கொண்ட கோவில்.  அதன்பின்னர் உடுப்பி டூ  கொல்லூர்  76 கிலோமீட்டர் பயணம் செய்வோம் 

13] கொல்லூர் மூகாம்பிகா  தாயாரின் சக்தியையும், கருணையையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை. 

அண்ணாதுரை மறைவுக்கு பின் பலர் எதிர் பார்த்ததை போலவே MGR, கருணாநிதி பகை விஸ்வரூபம் எடுத்தது MGR தணிக்கடை போட்ட நேரம், அப்பொழுது அடிக்கடி MGR கனவில் ஒரு அம்மன் வந்து காட்சி கொடுத்தார். அந்த கனவு அதிகாலை வேளையிலேயே MGR க்கு திரும்ப, திரும்ப வந்தது. அந்த அம்மனை அதற்கு முன் MGR பார்த்ததே இல்லை. ஒருநாள் MGR தனது நண்பரான ஓவியர் மணியனிடம் இதுபற்றி சொல்ல அவர் MGR சொன்னதை வைத்து ஒரு ஓவியத்தை வரைந்தார். இந்த அம்மனா என்று மணியன் கேட்க MGR ஆமாம் இதே அம்மன் தான் என்றார். அப்பதான் MGR க்கு முதன்முறையாக தெய்வ நம்பிக்கை வந்தது. அந்த அம்மன் வேறு யாரும் அல்ல கொல்லூர் மூகாம்பிகை.

அதன்பின்னர் MGR க்கு நெருக்கமாக இருந்த புலியூர் பாலு, வித்வான் லக்ஷ்மணன் போன்ற சில ஜோதிடர்கள் சொன்னதின் பேரில் ரகசியமாக கொல்லூர் மூகாம்பிகையை தரிசனம் செய்து விட்டு வந்தார். MGR முதல்வர் ஆனவுடன் அவர் மீண்டும் கொல்லூர் சென்றார் ஆனால்  இம்முறை அவர் ரகசியமாக செல்லவில்லை.ஊரே அறிய சென்றார். நான் இப்பொழுது ஆன்மீகவாதி ஆகிவிட்டேன் என்று மார்தட்டி சொன்னார். அந்த மூகாம்பிகைக்கு தங்கத்தால் ஆன ஒரு வாளை காணிக்கையாக MGR செலுத்தினார்.

அத்தகைய அந்த கொல்லூர் மூகாம்பிகா தாயாரை தரிசித்து விட்டு அதன்பின்னர் கொல்லூரில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 14] முருதீஸ்வரர் சிவன் கோவில் செல்வோம்.  ராமாயண காலத்தில் இருந்தே  முருதீஸ்வரர்  இங்கே அருள்பாலிக்கிறார். 

இங்கே உள்ள மலை அடிவாரத்தில் இருக்கும் ராமநாதர் சிவலிங்க மூர்த்தத்தை  நமது கைகளால் தொட்டு வழிபடலாம். இந்த கோவிலின் அழகே இக்கோவில் கோபுரம் தான்.
237.5 அடி உயரம் உடைய இந்த கோபுரத்தின் உச்சி வரை நாம் Lift  மூலம் செல்லலாம். கோபுர அடிவாரத்தில் இருந்து ஆரம்பித்து உச்சிவரை மொத்தம் 20
Floor. 

கோபுரத்தின் உச்சிக்கு சென்று அங்கிருந்தவாறே 123 அடி உயர சிவன் திரு உருவ சிலையை கண்டு களிக்கலாம். நான்குபுறமும் அரபிக்கடல் சூழ அதன் நடுவே தியான கோலத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் ஈசனை காண கோடி கண்கள் வேண்டும். 

முருதீஸ்வரர் சிவன் கோவிலை தரிசித்த பின் மீண்டும் நாம் மங்களூர் க்கு மங்களகரமாக வருவோம். முருதீஸ்வரர் டூ மங்களூர் 155 கிலோமீட்டர் பயணம். நான்காம் நாள்- மே 18 சனிக்கிழமை  மங்களூரில் இருந்து 155 கிலோமீட்டர் தூரம் உள்ள பேலூருக்கு பயணம். தமிழகத்தில் எவ்வாறு சோழ சாம்ராஜ்யமோ அதேபோல்   கர்நாடகாவில் ஹொய்சாள சாம்ராஜ்யம் மிகப்பெரிய சாம்ராஜ்யம். 

கங்கை நதி வரை படை எடுத்து சுலபமாக வெற்றிகொண்ட ராஜ, ராஜ சோழன், ராஜேந்திர சோழனால்  முழுமையாக வெற்றிகொள்ள முடியாத மண்ணாக அன்று இந்தியாவில் இருந்தது கர்நாடக தேசம் மட்டுமே . அதற்கு காரணம் இந்த ஹொய்சாள சாம்ராஜ்யம் தான். இரண்டாம் குலோத்துங்கன் ஸ்ரீமத் ராமானுஜரை கொல்ல முயற்சி செய்ய அப்பொழுது ராமானுஜர்  தமிழகத்தில்  இருந்து பேலூர் வந்ததற்கான காரணம்.இரண்டாம் குலோத்துங்கனால் தொடமுடியாத இடத்தில் அன்றைய ஹொய்சாள சக்கரவர்த்தி விஷ்ணு வர்தன் இருந்ததால் தான். 

சோழ தேசத்தில் இருந்து ஹொய்சாள தேசம் வந்த ஸ்ரீமத் ராமானுஜர் விஷ்ணு வர்தனின் மகளுக்கு இருந்த தீராத ஒருவித மனநோயை துளசி மூலம் குணப்படுத்தினார். அந்த நொடியில் இருந்து விஷ்ணு வர்தன் ஸ்ரீமத் ராமானுஜரின்  சீடர் ஆனார். அதன்பின்னர் விஷ்ணு வர்தன்  கட்டிய கோவில்கள்  தான் பேலூரில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவில் மற்றும்  ஹொய்சாளா சிவன் கோவில். 

முதலில் விஷ்ணு வர்தன் பிட்டி தேவன் என்னும் பெயர்கொண்ட சமணராக இருந்தார். ராமானுஜர் தான் பிட்டி தேவனை விஷ்ணு வர்தனாக மாற்றி விஷ்னு கோவிலையும், சிவன் கோவிலையும் கட்ட வைத்தார். விஷ்ணு வர்தன் கட்டிய அணைத்து கோவில்களுமே நட்சத்திர வடிவில் இருக்கும் தனித்துவமான, கலைத்துவமான, கவித்துவமான கோவில்கள். அன்று ராமானுஜரோடு தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வந்த வைஷ்ணவர்கள்  அங்கே மேலைக்கோட்டை என்னும் பகுதியில் அதிக அளவில் குடி ஏறினார்கள். அந்த வம்சாவளியில் வந்தவர்கள் தான் இன்று கர்நாடக தேசத்தில் மேலைக்கோட்டை ஐயங்கார்களாக இருக்கிறார்கள். 

பேலூரில்

15] சென்னகேசவபெருமாளையும் 16] ஹொய்சாளேஸ்வரரையும் தரிசித்த பின் அங்கிருந்து 145  கிலோமீட்டர் தூரம் உள்ள ஸ்ரீரங்க பட்டினத்திற்கு பயணம் செய்வோம். ரங்கம் என்றால் ஆறு பிரியும் இடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள். காவேரி கரை ஓரம் 5 இடங்களில் ரங்கநாதர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். அதில் நான்கு கோவில்கள் தமிழ்நாட்டிலும் ஒரு கோவில் கர்நாடக மாநிலத்திலும் இருக்கு. அந்த கோவில்கள் விவரம்

1] ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)

2] மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)

3] அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)

4] சதுர்த்தரங்கம் – சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)

5] பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்,மாயவரம் (தமிழ்நாடு)

கர்நாடக தேசத்தில் ஸ்ரீரங்க பட்டினத்தில் உள்ள   17] ஆதிரங்க க்ஷேத்ரத்தை தரிசித்து விட்டு  அங்கிருந்து நேராக வெறும் 20 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால்  மைசூர் வந்து விடும். மைசூரில் உள்ள நமது ரூமிற்கு சென்று நாம் ஓய்வு எடுப்போம். 

ஐந்தாம் நாள்- மே 19 ஞாயிற்றுக்கிழமை 

மைசூரில் உள்ள உலக புகழ்பெற்ற  18] மைசூர் அரண்மனையை பார்வையிட்டு அதன்பின்னர் நாம் அங்கிருந்து  19] சாமுண்டேஸ்வரி கோவிலை தரிசிக்க செல்வோம். மகிஷாசுரனை வதம் செய்த இந்த சாமுண்டேஸ்வரி மகிஷாசுரன் போன்ற அசுரர்களுக்கு பயங்கரி ஆனால் நம்மை போன்ற அடியவர்களுக்கோ இவள்  பயங்களை போக்கும் அபயாம்பிகையாக இருக்கிறாள். எனது முப்பாட்டனார் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் அவர்களின் வாழ்விலே இந்த சாமுண்டேஸ்வரி தாயார் பல அற்புதங்களை செய்திருக்கிறாள். 

சாமுண்டேஸ்வரி தாயாரை தரிசித்த பின்  நிறைவாக நாம் எழில்கொஞ்சும்  19] மைசூர் பிருந்தாவன் கார்டனை பார்வை இடுவோம். பலநூறு ஷூட்டிங் நடந்த இடம் இந்த மைசூர் பிருந்தாவன் கார்டன். அழகின் மறுபெயராக இருக்கும் இந்த மைசூர் பிருந்தாவன் கார்டனை பார்வையிட்டு அதன் பின்  ரூமிற்கு வந்து ஓய்வு எடுப்போம். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நின்று கொண்டே சாப்பிட்டால் மனஅழுத்தம் வருமாம்! இன்னும் இவ்ளோ பிரச்சனையா உண்டாகுமாம்!

tamiltips

இந்த மந்திரத்தை தினமும் ஒரே ஒரு முறை உச்சரித்தால் வெற்றி உங்கள் பக்கம்!

tamiltips

வெண்ணெய் தின்றால் இதயத்துக்கு ஆபத்தா?சந்தேகம் தீர இந்த செய்தியை படிங்க!!

tamiltips

தீராத மூல நோயையும் குணப்படுத்தும் மாசிக்காய்! மேனி அழகிற்கும் பெரும் பலன் தரும்!

tamiltips

தொட்டில் மரணம்

tamiltips

வீட்டு வாசலில் கோலம் போடுவதேன்? தமிழ் கலாச்சரத்தின் ரகசியம்!!

tamiltips