ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதால் மற்றவர்களின் அனுபவத்தை அப்படியேஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக முன்னோர் இப்படித்தான் செய்தார்கள் என்று குழந்தைக்கு எதுவும் செய்ய வேண்டாம். குழந்தை கவனிப்பை தனித்தன்மையுடன் செய்யுங்கள். இதனால் தவறுகள்செய்துவிட நேரிடலாம். ஆனால் அவையும் இயல்பே என்று வாழ்வில் பாடம் கற்றுக்கொண்டு பயணம்செய்ய வேண்டும்.
குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம் பேணுவதற்குக் கண்டிப்பு தேவை, அதேநேரம் செல்லமும் தேவை. ஒரே பிள்ளை என்பதற்காக வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதும், அழவிடாமல் வளர்ப்பதும் சரியல்ல.
அளவு கடந்த கண்டிப்பும் மிரட்டலும் கொண்டு வளர்க்கப் படும் குழந்தை ஒழுக்கமாக நடந்து கொள்ளலாம். ஆனால், அதில் ஏற்படும் பயமும், உள்மனக் காயங்களும் ஆற்ற முடியாதவை. குழந்தையின் இயற்கையானதுறுதுறுப்பும், உற்சாகமும் குலைந்து விடக்கூடும்.
சில வீடுகளில் அம்மா அன்பு காட்ட, அப்பா கண்டிப்பு காட்டுபவராக இருப்பார். இது மிகவும் தவறு. ஏனென்றால் அப்பா என்றாலே குழந்தைக்கு மிரட்டலும் உருட்டலுமே ஞாபகம் வந்துவிடும். அன்பு காட்டுவதாக இருந்தாலும் கண்டிப்பு காட்டுவதாக இருந்தாலும் இருவரும் ஒன்றுசேர்ந்து காட்ட வேண்டும்.
குழந்தைகளுக்கு குழப்பம் தராத வகையில் கண்டிப்பதும் அன்பு காட்டுவதும் இருக்க வேண்டும். பொம்மையை உடைப்பதைக் கண்டு சிரிப்பதும், ஒருசில நேரம் கோபப்படுவதும் குழந்தையை குழப்பிவிடும். அதனால் எது தவறு, எது சரி என்பதை தெளிவாக சொல்லிக்கொடுக்க
அதீத கண்டிப்பு, மிகையான செல்லம் என்று இரண்டு எல்லைகளையும் விட்டுவிட்டு இடையில் அளவானசெல்லமும் கண்டிப்புமாக இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் பெற்றோர் நம் மீது அன்பும் அக்கறையும் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் குழந்தையிடம் தோன்றும் அளவுக்கு வளர்த்தால் போதும்