தர்பூசணி பழத்தின் விதை என்பது பல நல்ல மருத்துவ குணநலன்களை கொண்டதாகும். தர்பூசணி பழத்தின் விதையை வறுத்து நொறுக்குத் தீனி போல் உண்ணலாம். மிகவும் ருசியாக இருக்க கூடியது.
தர்பூசணியின் விதையானது சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது என்று கண்டு பிடித்து உள்ளனர். மிகவும் அதிகமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ள கூறுகின்றனர். நார்ச்சத்து சர்க்கரை வியாதியை குறைப்பதற்கும் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது.
மேலும் சர்க்கரை வியாதி டைப் 2 உள்ளவர்களுக்கு இது மிகப் பெரும் உறுதுணையாக திகழ்கிறது.இந்த பூசணி பழத்தின் விதையில் அமினோ ஆசிட்டுகள் நிறைந்துள்ளன. ரத்து ஓட்டங்களுக்கு பெரிதளவில் உதவி செய்கின்றது. வீக்கங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் உதவி செய்கிறது.
தர்பூசணியின் விதை இதயம் பலமாக உறுதியுடனும் செயல்பட தர்பூசணி பழத்தின் விதையும் உதவுகின்றது என்று குறிப்பிடுகின்றனர். தர்பூசணி பழத்தின் விதையில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் நிறைந்துள்ளன. இது மாரடைப்பு வருவதற்கான காரணங்களை குறைகின்றது. அதாவது ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு வருவதற்கான பெரிய காரணங்களாக அமைந்துள்ளது. மேலும் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.