Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தோப்புக்கரணம் போடுவீர்கள், குசா தோப்புக்கரணம் தெரியுமா? சித்தர்கள் அருளிய அற்புதத்தை அறிந்துகொள்ளுங்கள்!

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக்கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக்கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து எழுந்து தோப்புக்கரணம் இடவும். கால்கள் முழுவதும் மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம்.

குறைந்தது மூன்று தோப்புக்கரணம் இடவும். முடிந்தால் 12 24 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஒரு ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும்.

இது மிக முக்கியமான விதிமுறையாகும். இறைநாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது. வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்கியம் ஆடு மாடுகளைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும் அவ்வளவே. உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக்கரணம் இட்டபின் மூச்சுக்காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சாதாரணமாக கால்கள் இரண்டையும் ஒன்றுக்கொன்று இணையாக வைத்தே தோப்புக்கரணம் இடுவார்கள். ஆனால் இங்கு குறிப்பிட்டது போல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்துத் தோப்புக்கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக்கரணம் ஆகும். சாதாரண தோப்புக் கரணத்தை போல் குறைந்தது நூறு மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக்கரணம் ஆகும்.

பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்த தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம். சிறப்பாக கர்ப்பமுற்றிருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக்கரணம் ஒரு வரப்பிரசாதமாகும். பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தைகளும் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மன வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.

Thirukkural

பிரசவத்திற்கு பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனை குறையும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எப்போது தாம்பத்திய உறவு கொள்ளலாம்?

tamiltips

கண் புரை ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழி தெரிஞ்சுக்கோங்க

tamiltips

இளம் வயதில் மரணிக்கும் அபாயம்! ஆபத்தில் இந்திய பெண்கள்! காரணம் இந்த நோய் தான்!

tamiltips

நினைவாற்றலை அதிகரிப்பது மட்டுமல்ல.. இன்னும் ஏராள நன்மைகள் வல்லாரை கீரையில்!

tamiltips

கடைசியா எப்போ ஊஞ்சல் ஆடுனீங்க? அஞ்சு நிமிஷம் உட்கார்ந்தால் என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

tamiltips

உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சை எல்லாம் தேவைதானா?

tamiltips