பகலில் பல்வேறு உழைப்பின் களைப்புகள், மன அழுத்தங்கள் இவற்றுடன் படுக்கச் செல்வோர் இரவில் தொந்தரவற்ற ஆழ்ந்த உறக்கத்தைவிரும்புவதுண்டு. ஆனால் இரவிலும் சூழும் பகல்நேர மன அழுத்த நிகழ்வுகள் அவர்களை அவ்வாறு தூங்க அனுமதிப்பதில்லை. இந்நிலையில் ஆடைகளை களைந்து விட்டு உறங்குவது குழந்தைகளைப் போல கவலையற்ற உறக்கத்துக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
பகல் நேர வெப்பம் மாலைக்கு மேல் படிப்படியாக குறைந்தாலும் உடல் முழுமையாக குளிர்ச்சி அடைவதே ஓய்வான சிறப்பான தூக்கத்துக்கு வழி வகுக்கும். உடலில் ஆடை இன்றி உறங்குவது உடல் எளிதில் குளிர்வடைய உதவுகிறது. பகல் முழுவதும் இறுக்கமான ஆடைகளுடன் உழல்வதால் தோலின் சுவாசம் தடுக்கப்படுகிறது. இரவில் நிர்வாணமாக உறங்குவது. தோலின் சுவாசத்துக்கு வழிவகுத்து ஆரோக்கியமடையச் செய்யும்
அடுத்ததாக பகல் நேரங்களில் இறுக்கமான உள்ளாடைகளுக்குள் பொதிந்து கிடக்கும் பிறப்புறுப்புகள் வேர்வை, காற்றின்மை உள்ளிட்டவற்றால் அழுத்தப்படும் நிலையில் இரவில் நிர்வாணமாக உறங்குவதால் அழுத்தங்களில் இருந்து விலகி பிறப்புறுப்பு ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. உள்ளாடைகள், மேலாடைகள் என ஆடைகளின் அடுக்குகுகளுக்குள் சிறைப்பட்டுள்ளவர்கள் அதில் இருந்து விடுபடும்போது மனம் லேசாகி மன அழுத்தம் குறைகிறது.
இரவில் நிர்வாண நிலை ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்தினாலும் அதிகாலையில் விரைவில் மனரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆடைகளை அணிந்துகொள்ளச் செய்யவும் அதிகாலையிலேயெ உற்சாகமாகச் செயல்படவும் ஆக்கபூர்வமான உற்சாகத்தை அளிக்கிறது. ஆழ்ந்த உறக்கம் அழகு மேம்பட வழிவகுக்கிறது. ஆடைகளின்றி உறங்கும்போது உடலில் இயல்பாகவே ஏற்படும் வசதி நிலையானது ஹார்மோன் வளர்ச்சியை மேம்படுத்தி, தசையணுக்களை செப்பனிடுவதன் மூலம் தோலின் அழகும் முடியும் பாதுகாக்கப்பட்டு இளமையான தோற்றம் தக்க வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
நிர்வாண நிலையில் உடல் குளிர்ச்சி அடைவதால் கிடைக்கு ஆழ்ந்த அதே நேரத்தில் குறைந்த நேர உறக்கம் உடல் எடை கூடுவதை தடுக்கிறது. நிர்வாண நிலையில் உறங்க மன ரீதியான ஒப்புதல் இல்லாதவர்கள் மிக லேசான தளர்வான ஆடைகளை அணிந்து உறங்குவது ஓரளவு பலனைத் தரும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.