நாவல் விதைகளைப் பொடித்து அதினின்று பெறப்பட்ட பொடியை தினம் 2 வேளை 1 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவு குறைகிறது.
சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாவல் பழக் கொட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாவல் பழம் – சிறுநீரைப்பெருக்கும்.
நாவல்கொட்டை- சிறுநீரைக் குறைக்கும், பேதியை நிறுத்தும், ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும். நாவல் மரப்பட்டை- ரத்த அழுத்தம், வாய்ப்புண், தொண்டைப்புண் இவைகளைக் குணமாக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் தோஷம் நீங்கும். நாவல் மரவேர்- வாதநோய், பால்வினை நோய்கள் குணமாகும்.
நாவல்பழச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் மற்றும் நெல்லிச்சாறு இவை இரண்டையும் சம அளவாகச் சேர்த்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடல் சோர்வு, ரத்த சோகை குணமாகும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.