Tamil Tips
சமையல் குறிப்புகள் பெற்றோர்

பாரம்பர்ய அரிசியில் செய்ய கூடிய இனிப்பு தோசை ரெசிபி

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரக்கூடிய பாரம்பர்ய அரிசியில் செய்யப்படும் இனிப்பு தோசை ரெசிபி (Sweet Dosa Recipe) இது.

பாரம்பர்ய அரிசிகளின் சுவையே தனி. அதன் சத்துகளோ ஏராளம். குழந்தைகளுக்கு சத்தான உணவுத் தரவேண்டியது பெற்றோரின் கடமை. அவ்வகையில் எப்போதும் செய்யும் தோசைக்கு பதிலாக பாரம்பர்ய அரிசியில் செய்யப்பட்ட குள்ளக்கார் அரிசி தோசை குட்டீஸ் ஸ்பெஷல்தான்.

குள்ளக்கார் இனிப்பு தோசை

தேவையானவை:

  • குள்ளக்கார் அரிசி – 1 கப்
  • உளுத்தம் பருப்பு – ¼ கப்
  • அறிந்த பேரீச்சம் பழம் – 20
  • பொடித்தப் பனங்கற்கண்டு – 10 ஸ்பூன்
  • ஊறவைத்த உலர் திராட்சை – 25
  • தேன் – 5 ஸ்பூன்
  • வறுத்து பொடித்த முந்திரி – 20
  • பசு நெய் – தேவையான அளவு

செய்முறை:

sweet dosa

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

  • குள்ளக்கார் அரிசி, பருப்பை தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஊற வைத்த அரிசி, பருப்பை நன்றாக அரைக்கவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 10 மணி நேரம் மாவைப் புளிக்க விடவும்.
  • மறுநாள் காலை தோசை ஊற்றுவதற்கு முன் பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து மாவைக் கலக்கவும்.
  • பேரீச்சம் பழத்தைக் கொட்டை நீக்கி நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் பேரீச்சம் பழம், உலர் திராட்சை, வறுத்த முந்திரி ஆகியவற்றைக் கலந்து கொள்ளவும்.
  • தோசை கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி நெய் விடவும். வெந்ததும் தோசை மேல் கலந்து வைத்த நட்ஸ் கலவையை ஒரு பாதியில் பரப்பவும்.
  • அதில் அரை ஸ்பூன் தேன் விட்டு மறு பாதி தோசையை மூடி விடவும்.
  • சூடாக சாப்பிடவும் ருசியாக இருக்கும். அதுபோல ஆறினாலும் ருசியாக இருக்கும்.
  • இந்த குட்டீஸ்கான இனிப்பு தோசை குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக மாறிப் போகும்.

dates dosa for babies

Thirukkural

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான கேரட் – டேட்ஸ் கீர் ரெசிபி

பலன்கள்:

  • பாரம்பர்ய அரிசி வகைகளில் எல்லா பருவத்திற்கும் ஏற்ற அரிசி, குள்ளக்கார். அதனால் அனைவருக்கும் இந்த அரிசி ஒத்துக்கொள்ளும்.
  • மருத்துவ குணங்கள் நிறைந்தது இந்த உணவு.
  • நரம்பு மண்டலத்துக்கு வலு சேர்க்கும்.
  • மூளை
  • சுறுசுறுப்பாகும்.
  • உடலுக்கு வலிமையை அள்ளித் தரும்.
  • குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

இதையும் படிக்க: ஊட்டச்சத்துகளைத் தரும் ஹெல்தியான சாலட் ரெசிபி…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளைத் தூங்க வைப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்…

tamiltips

பல நோய்கள் வராமல் தடுக்கும் ஒரே ஒரு மருந்து… இது நம் பாரம்பர்ய பொக்கிஷம்…

tamiltips

கொசுக்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? இயற்கை விரட்டிகளால் முடியுமா?

tamiltips

இருமல், வறட்டு இருமலை போக்கும் 16 வீட்டு வைத்தியம்

tamiltips

குழந்தைகளின் முதல் 1000 நாட்கள்… மறக்கவே கூடாத 21 விதிமுறைகள்..!

tamiltips

சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…

tamiltips