நடிகர் வடிவேலு பாலாஜியின் உடலைப் பார்த்தவர்கள் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அனைவரும் நெஞ்சில் துடித்து அழுது கொண்டிருக்கின்றனர்.
வடிவேலுவின் நடை, பாவனைகளை கொண்டுள்ள வடிவேல் பாலாஜி இறந்த செய்தி கேட்டு நடிகர் வடிவேலு தனது இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
தனது சாயலில் இருக்கும் ஒரு உன்னதமான நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என்று வடிவேலுவும் உருக்கமாக பதிவை கொடுத்துள்ளார்.
இதேவேளை, நாளை வடிவேலுவின் பிறந்தநாள்,அவரது சாயலில் இருக்கும் ஒரு நல்ல மனிதன் இறந்த பிறகு , எப்படி பிறந்த நாளை நாம் கொண்டாட முடியும் என்றும், இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுவும் கிடையாது என்றும் வருத்தத்தோடு வடிவேலு ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
நடிகர் வடிவேலுவை போலவே அனைவரையும் தனது திறமையால் உடல் அசைவுகளாலும் முகத்தாலும் சிரிக்க வைத்தவர் தான் வடிவேலு பாலாஜி.
அனைவரையும் சிரிக்க வைத்த மனிதன் இன்று அனைவரையும் அழ வைத்து போய் விட்டாரே என்று சொல்லாத ஆட்களே கிடையாது.