• சில
மாதங்களில் பெண்ணுக்கு
இரண்டு கரு
முட்டைகள் வெளியாகலாம்.
இந்த இரண்டு
கரு முட்டைகளில்
இரண்டு விந்தணுக்கள்
நுழையும்போது இரட்டைக்
குழந்தைகள் உருவாகலாம்.
• இயற்கை
முறையில் உருவாகும்
இரட்டையர்களில் 70 சதவிகிதம்
இரண்டு கரு
முட்டைகளால்தான் நிகழ்கிறது.
பிறக்கும் குழந்தைகள்
ஆண்களாக அல்லது
பெண்களாக அல்லது
ஆணும், பெண்ணுமாக
இருக்கலாம். இவர்கள்
ஒரே மாதிரி
காட்சியளிக்கமாட்டார்கள்.
• கருமுட்டையில்
உயிரணு நுழைந்தபின்னர்
சினைமுட்டையாக மாறும்.
இந்த சினைமுட்டையானது
ஏதேனும் காரணங்களால்
இரண்டாக பிரியும்போதும்
இரட்டைக் குழந்தைகள்
உருவாகலாம். 30 சதவிகித
இரட்டையர்கள் இப்படித்தான்
உருவாகிறார்கள். இவர்கள்
ஒரே மாதிரி
காட்சியளிப்பார்கள்.
• சினை
முட்டை இரண்டாக
பிரிவது முன்கூட்டியே
நிகழும்போது இரண்டு
குழந்தைக்கும் தனித்தனியே
தொப்புள்கொடி, பனிக்குடம்
போன்றவை இருக்கும்.
. எட்டு நாட்களுக்குப்
பிறகு பிரியும்போது
இருவருக்கும் பொதவாக
ஒன்றுதான் இருக்கும்.
இரண்டு பேருக்கும் ஒரு பனிக்குடம், ஒரு தொப்புள் கொடி என்ற நிலையில் கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் நிறைய சிக்கல் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.
13 நாட்களுக்குப் பிறகு சினைமுட்டை பிரியும்போது ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்கள் உருவாகலாம்.