தலையணை வைத்து தூங்கும்போது உங்கள் முகம் தலையணைக்கு உட்புறமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் முகத்தில் பாக்டீரியாக்கள் பரவ மற்றும் அழுக்கு பரவ வாய்ப்புள்ளது. இது உங்கள் சருமத்தில் பருக்களை ஏற்படுத்தும். பருக்கள் மட்டுமின்றி இதனால் உங்கள் முகத்தில் சுருக்கங்களும் ஏற்படலாம். உங்கள் முகம் தலையணையுடன் இணைந்திருக்கும் போது அது முன்கூட்டியே சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சருமத்தை பராமரிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் தலையணை வைத்துகொள்ளாமல் தூங்குவது நல்லது.
முதுகு வலியால் அவதிப்படுபவராக நீங்கள் இருந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது தலையணை வைத்து தூங்குவதை தவிர்ப்பதுதான். ஏனெனில் உங்களுக்கு முதுகுவலி ஏற்பட முக்கிய காரணம் உங்களின் தலையணைதான். தலையணை இல்லாமல் தூங்கும்போது உங்கள் முதுகெலும்பு ஓய்வெடுக்க முடியும். மேலும் அதனை இயற்கை வடிவிலேயே வலையாமல் இருக்கும்.
மென்மையான தலையணை வைத்து தூங்கும் போதுதான் உங்களுக்கு நிம்மதியான தூக்கமும், கழுத்து மற்றும் முதுகிற்கு ஓய்வும் கிடைக்கிறது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் நினைப்பது தவறாகும். ஆய்வுகளின் படி தலையணை இல்லாமல் தூங்குவதுதான் உங்கள் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கும். தலையணை இல்லாமல் தூங்குவது உங்களுக்கு இன்சொமேனியா போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும்.