Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஒரே ஒரு மொந்தன் வாழைப்பழம்! எத்தனை பிரச்சனைகளை தீர்க்கும் தெரியுமா?

சில இதய நோயாளிகள். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி, இதயத்துடிப்பும்சரி, கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்குள் வரவில்லையே
என்று சலித்துக்கொள்வதுண்டு.
தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுங்கள். இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்

வாழைக்காயின் ரகசியம்;- இதயம் சீராக செயல்பட பொட்டாசியம் (துவர்ப்புச்சத்து) மிக அத்தியாவசியமாகிறது. இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாகவோ சாப்பிட ஒரு நாளைக்குத் தேவையான பொட்டாசியம் வாழைக்காயின்  மூலமே கிடைக்கிறது.

வாழைக்காயில் நார்ச்சத்திகம் என்பதாலும் சி வைட்டமின் நிறைந்துள்ளதாலும் சுகருக்கும் மிகச்சிறந்த அருமருந்து. இதில் மெக்னீசியம் இருப்பதால் உடலுக்குத்வையான கால்சியம் சத்தை உறிஞ்ச மெக்னீசியம் உதவுவதால் எழும்புக்கும் நல்லது. சி விட்டமினிருப்பதால் நுரையீரலும் வழுப்பெற்று சுத்திசெய்யப்படுகிறது.

Thirukkural

இதில் 913மிகி பொட்டாசியம் அதீததமென்பதால் கெட்டகொழுப்புகள் கட்டுப்படுத்தப்படுவதோடு இரத்த அழுத்தமும் சீரடைகிறது. தோலுக்கும் காய்க்குமிடையிலுள்ள பசை போன்ற பொருளில் விட்டமின்கள் B6,B12 உள்ளதால் அடைப்புகள் சரிசெய்யப்படுகிறது.

மொத்தத்தில் தினம் ஒரு மொந்தன் வாழைக்காய் மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தை வாழவைக்கிறது. தொப்பையிருந்தாலும் கரைந்துவிடும். உடல் பருமன் குறையும். சோர்வாகயிருப்பவர்களையும் சுறுசுறுப்பாக்கும்வாழைக்காய் வயதானவர்களுக்கு மிகச்சிறந்த சஞ்சீவி.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தாய்ப்பால் சுரப்பை கூட்டும் உணவு வகைகளை தேடி சாப்பிடுங்க உங்க செல்ல பிள்ளைக்காக! பாகம் 1

tamiltips

ஞாபகத்தை அதிகரிப்பது கடல் மீனா அல்லது ஆற்று மீனா?

tamiltips

ஒரு கிலோ ரூ.200 தான் ! சந்தையில் சுடச்சுட விற்பனையாகும் எலிக்கறி!

tamiltips

கஞ்சா அடித்தால் ஆண்மை அதிகரிக்கும்! ஹார்வேர்டு ஆய்வில் புதிய தகவல்!

tamiltips

புளிப்பு சுவை உடலுக்குத் தேவையா??புளிப்பு எடுத்துக்கொண்டால் என்னாகும் தெரியுமா?

tamiltips

பொடுகுத் தொல்லைக்கு நல்லெண்ணெய் தேய்ங்க – வெண்புள்ளிக்கு வேப்பிலை போதும் – குடலில் உள்ள புழு தொல்லைக்கு சுண்டக்காய்

tamiltips