Tamil Tips
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

குழந்தைகளை சாப்பிட வைக்கும் கறிவேப்பிலை பொடி… பலரும் அறியாத, தெரியாத பலன்கள்…

குழந்தைகள் மட்டுமா பெரியவர்களும் கறிவேப்பிலையைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு சாப்பிடுகிறார்கள். தட்டில் தூக்கி ஓரமாக வைக்கவா கறிவேப்பிலையை சமைக்கும்போது உணவில் சேர்க்கப்படுகிறது. சொல்லுங்கள்… நாம் கறிவேப்பிலையை ஓரம் கட்டினால் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கிள்ளி ஓரமாக வைக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பொக்கிஷம் நம் ஊர் கறிவேப்பிலை. நம் முழு உடலையே அதனை சார்ந்த உறுப்புகளையும் காக்கும் சக்தி கறிவேப்பிலைக்கு உண்டு.

நம் ஊர் வானிலைப்படி கறிவேப்பிலை இங்கு நன்றாக வளரும். முடிந்தால் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் கறிவேப்பிலையை வளர்க்கத் தொடங்குங்கள். உங்களது ஆரோக்கியமும் சேர்ந்து வளரும்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், தாய்ப்பால் கொடுத்து முடித்த பின்னும் என் தலைமுடி கொட்டுகிறது. உதிர்கிறது, அடர்த்தி குறைவாகிறது, முடிவு பிளவுபட்டு இருக்கிறது. இப்படி அனைத்து பிரச்னைகளையும் சொல்லி புலம்பும் முன் ஒருமுறை உங்களின் உணவு தட்டை உற்றுப் பாருங்கள்.

அம்மாகளும் அப்பாகளும் கறிவேப்பிலையை ஒதுக்கி வைத்தால் பிள்ளைகளும் அதைப் பின் தொடருவார்கள். இப்படிதான் கால காலமாக ஏன் என்று தெரியாமலே ஒதுக்கி வைக்கும் பழக்கம் தொடர்ந்து வருகிறது.

Thirukkural

முடி பிரச்னைக்கு முழுமையான தீர்வு தருவது எது தெரியுமா?

அனைத்து வகை முடி தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது இந்தக் கறிவேப்பிலைதான்.

கறிவேப்பிலையைத் தினம் தினம் உங்கள் உணவில் இடம் பெற செய்யுங்கள். பின்னர் நீங்களே அசந்து போவீர்கள்.

கரிசாலை, நெல்லி, கீழாநெல்லி, அவுரி இவற்றுடன் சமபங்கு கறிவேப்பிலை சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்ச வேண்டும்.

அனைத்து வகை முடி பிரச்னைகளுக்கும் முழுமையான தீர்வு தரும் ‘கறிவேப்பிலை எண்ணெய் கூந்தல் தைலம்’. ஆண்கள், குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.

curry leaves benefits

உணவில் எப்படியெல்லாம் கறிவேப்பிலை சேர்த்தால் உடலுக்கு நல்லது?

நிழலில் கறிவேப்பிலையை உலர்த்தி, காய வைத்து அரைத்தால் ‘கறிவேப்பிலை பொடி’ தயார்.

இட்லி, தோசைக்கு கறிவேப்பிலை பருப்பு பொடி செய்து கொள்ளலாம்.

வாரம் ஒருமுறையாவது கறிவேப்பிலை சாதம் செய்து சாப்பிடுங்கள்.

வாரம் ஒரு முறை கறிவேப்பிலை துவையல் செய்து சாப்பிடுங்கள்.

சட்னி தாளிக்க, தயிர் சாதம் தாளிக்க, குழம்பு, சாம்பார், கூட்டு, குர்மா, ரசம் எனப் பெரும்பாலான உணவுகளில் கறிவேப்பிலை இருக்கட்டும்.

இதையும் படிக்க : உடனடி எனர்ஜி… பல்வேறு சத்துகள் உள்ள 3 வகை ஹோம்மேட் மால்ட் ரெசிபி…

கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டால் நாம் பெறுகின்ற நன்மைகளின் பட்டியல் தெரியுமா?

30 வயது தொடங்கியவுடன் ஆன்டிஏஜிங் கிரீம்களை தடவுவதைவிட கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே தோல் சுருக்கம் வராது. காசு செலவு செய்து ஆன்டி ஏஜிங் கீரீம் வாங்கும் பணம் உங்களுக்கு மிச்சமாகும்.

என்ன சாப்பிட்டாலும் சோர்வு, மனச்சோர்வு, குழந்தைகள் பின்னாடியே ஓடி களைத்து வரும் சோர்வு, அதிக வேலை சோர்வு இப்படி என்னென்ன சோர்வு காரணங்கள் இருந்தாலும் சரி கறிவேப்பிலை டீ போட்டு குடிக்கலாம்.

கறிவேப்பிலை பொடி, தனியா பொடி, சோம்பு பொடி. இவையெல்லாம் சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த பின், பனை வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.

இறுதியில் இரண்டு புதினா இலைகள் அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்க சோர்வு காணாமல் போய்விடும்.

வயது ஆக ஆக மூட்டு தேய்தல் பிரச்னை என்று எல்லோரும் பயமுறுத்துகிறார்களா, கறிவேப்பிலை சார்ந்த உணவுகளை சாப்பிடுங்கள். மூட்டு தேய்தல் வராது.

சின்ன வயதிலே நரை… நேர் கோடு எடுத்தாலும் நரை. கோணலாக முடியை வாரினாலும் நரை. இதற்கு ஒரு சிறப்பு மருந்து இருக்கிறது.

ஒரு காம்பிலிருந்து உதிர்த்த கறிவேப்பிலையை நீரில் போட்டு இரவில் ஊறவையுங்கள். மறுநாள் காலை அதை அப்படியே சூடேற்றவும். 5 நிமிடங்கள் கொதி வந்ததும் நிறுத்தி விடலாம். வடிகட்டி அந்த தண்ணீரை குடித்துவிடுங்கள். இதுதான் கறிவேப்பிலை டானிக். காலையில் வெறும் வயிற்றில் குடிக்க 48 நாட்களில் பலன் தரும்.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு… நம் ஊர் பாரம்பர்ய வகை சாதம் ரெசிபி…

curry leaves

‘கண் பிரச்னை என்றால் கேரட் சாப்பிடு’ என்போம்.கேரட் நல்லதுதான். ஆனால் கேரட்டை விட பல மடங்கு பலன் அளிக்க கூடியது கறிவேப்பிலை. பீட்டாகரோட்டின் அதிகமாக உள்ளதால் பார்வைத்திறனை மேம்படுத்தும்.

பொதுவாக கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் மிக மிக அதிகம். இதனால் இது எல்லா நோய்களுக்குமான மருந்து என்றே கூறலாம்.

குறிப்பாக, புற்றுநோயை அழிக்க கூடிய தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் புற்று செல்களை அழிக்குமாம். தடுப்பு மருந்தாக செயல்படும்.

பொதுவாகவே, நம் உணவுகளில் கறிவேப்பிலை தொடர்ந்து சேர்த்து வந்து, அதை நாம் சாப்பிட்டு வந்தாலே நம் உடலில் புற்று செல்கள் ஆதிக்கம் செலுத்தாது. புற்றுநோயும் வராது.

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், கறிவேப்பிலை பொடி சாதத்தை தினமும் ஒரு சிறிய கின்னம் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே நல்லதுதான். சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

அதிக கொலஸ்ட்ரால் உடலில் இருந்து அவதிப்படும் தாய்மார்கள், கறிவேப்பிலையை உணவில் சேர்த்து வரலாம். கெட்ட கொழுப்பு நீங்கும்.

அஜீரணம் யாருக்குத்தான் இல்லை. இப்போதெல்லாம் குழந்தைகள் கூட அஜீரணத்தால் பாதிக்கப்படுகின்றன. உணவில் கறிவேப்பிலையும் அதை நீங்கள் சாப்பிடுவதும் முக்கியம். அஜீரணம் நீங்கும்.

குழந்தையை சாப்பிட வைக்க கஷ்டப்படும் தாய்மார்கள் இங்கு எத்தனை பேர்? கணக்கே கிடையாது அல்லவா. பாதி தாய்மார்கள் என் குழந்தை சாப்பிடவே மாட்டெங்குது எனப் புலம்பி தள்ளுகிறார்கள். உங்களுக்கு ஒரு தீர்வு இங்கே பார்க்கலாம்.

சாப்பிட மறுக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்கும் பொடி

கறிவேப்பிலையை நிழலில் வைத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதனுடன் சுக்கு, சீரகம் சம அளவு சேர்த்து பொடித்து வைக்கவும்.

உப்பு போட்டு சூடான சாப்பாட்டில் இந்தப் பொடியை போட்டு பிசைந்து குழந்தைக்கு 1-2 வாய் ஊட்டிவிடுங்கள். இதுவே போதும்.

பின்னர் நீங்கள் எந்த உணவு கொடுக்க நினைக்குறீர்களோ அதைத் தரலாம்.

பசியின்மை இனி இருக்காது.

குழந்தைகள் தங்களது உணவை இனி சீராக சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கு ஆரோக்கியம், வளர்ச்சி, எடை அதிகரிப்பு, எனர்ஜி தரும் உணவுகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடர்த்தியான முடி வளர டிப்ஸ்!

tamiltips

கொசுக்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிகள்…

tamiltips

குழந்தைக்கு ஏற்படும் குமட்டல், வாந்தி… சிம்பிளான வீட்டு வைத்திய முறைகள்…

tamiltips

கோபம் வந்தால் இதையெல்லாம் செய்யுங்க… தாய்மார்களுக்கான டிப்ஸ்…

tamiltips

குழந்தைகளுக்கான ஹோம்மேட் வேப்பர் ரப் செய்வது எப்படி?

tamiltips

தொப்பை உள்ள குழந்தைகள்… பலமா? எச்சரிக்கை அறிகுறியா?

tamiltips