சின்னத்திரையில் இருந்துகொண்டே பல ரசிகர்கள் பட்டாளத்தை பிடிப்பவர்கள் அதிகம்.அந்தவகையில் பல நடிகர் நடிகைகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானவர் சாண்டி.இவர் அதன் பின்னர் திரைப்பட நடன இயக்குனராக மாறி உச்சக்கட்ட புகழில் இருக்கும் நடிகர் வரை பணியாற்றி பெரும் புகழ் பெற்றார்.
இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதியிடம் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடம் கழித்து லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்த இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில் சாண்டியின் கோரியோகிராஃபில் வெளியான கர்ணன், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சாண்டி மாஸ்டர் வீட்டில் விசேஷம் நடந்துள்ளது.
அதாவது சாண்டியின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அந்த போட்டோக்களை சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அதில் சாண்டி தனது மனைவிக்கு வணக்கம் சொல்லி வளையல் பூட்டுகிறார். இதேபோல் உறவினர்களும் சாண்டியின் மனைவிக்கு வளையல் அணிவித்து விடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து சாண்டியின் மகள் லாலாவும் தனது அம்மாவுக்கு வளையல் பூட்டி விடுகிறார்.
இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சாண்டிக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.