பாகற்காயில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோய்க்கு எதிர்ப்பு
அரணாக அமைகிறது, மார்பகப்
புற்று செல்
வளர்ச்சியை பாகற்காய்
குறிப்பிட்ட அளவு
கட்டுப்படுத்துகிறது என்பதை அமெரிக்க நோயியல் துறை கண்டறிந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நமது இந்திய மருத்துவத்தில் ரத்தத்தில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பாகற்காயில் உள்ள ஹைப்போகிளைமிக் பயன்படும் என்று குறிப்புகள் உள்ளன. அதே வேதிப்பொருளே மார்பக புற்று செல் வளர்ச்சியை தடுக்கவும் செய்யும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே, தொடர்ந்து பாகற்காய் சாப்பிட்டுவரும் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதுடன், இதனை தடுப்பூசியாகப் பயன்படுத்த முடியுமா என்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆய்வு முடிவுகள் நல்லபடியாக வெளிவரும் பட்சத்தில் நமது பாகற்காயின் மதிப்பு எங்கேயோ போய்விடும் என்பது உறுதி