செவ்வாய் கிரகம் போன்ற பூமிக்கு வெளியில் உள்ள கிரகங்களில் ஏதேனும் ஒன்றில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரக வாசிகள் வசிக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. இதன்பேரில், நாசா உள்பட பல்வேறு விஞ்ஞான ஆராய்ச்சி அமைப்புகளும் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றன. குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் வேற்றுக் கிரக வாசிகள் வசிக்க வாய்ப்புள்ளதாக, விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
இதன்பேரில், செவ்வாய் கிரகம் பற்றி விரிவாக ஆய்வு செய்வதற்காக, நாசா, சமீபத்தில் ரோவர் என்ற விண்கலனை அனுப்பியிருந்தது. இந்த விண்கலன், நாசாவில் தரையிறங்கி ஆய்வு நடத்தி, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதில், ஒரு புகைப்படத்தில், செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் கட்டியுள்ள கோயில் போன்ற அமைப்பு தென்படுவதாக, பிரபல ஆராய்ச்சியாளர் ஸ்காட் சி வாரிங் என்பவர் கூறியுள்ளார்.
இந்த கோயில், ஐந்து நிலைகள் கொண்டதாக உள்ளதாகவும், இதனை விரிவாக ஆய்வு செய்தால், ஏலியன்கள் பற்றிய பல உண்மைகளை கண்டுபிடிக்கலாம் எனவும், அவர் நாசாவுக்கு வலியுறுத்தியுள்ளார். எனினும், இது ஏதேனும் மலை அல்லது பாறைகளின் புகைப்படமாக இருக்கலாம் என்றும், தொலைவில் இருந்து பார்க்கும்போது கோயில் போல தோன்றுகிறது என்றும், சில விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.