Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உங்கள் வயது நாற்பதா? கட்டாயம் இதை படியுங்கள், கடைபிடியுங்கள்!

இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில், நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான்
இறுதி வரையில் இருப்பீர்கள்.

·        
தொந்தி கனக்க விடாதீர்கள்.தொந்தரவு
வரும்.

Thirukkural

·        
மனம் கனக்க விடாதீர்கள்
மரணம் வரும்.

ஒரு மனிதன் வியாதியுடன் வாழப்போகிறானா, வீரியமுடன் வாழப்போகிறானா, நெஞ்ச நிறைவோடு
வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான் இந்த நாற்பது.

·        
நிறைய வேலை செய்வதால் நமக்கு
நிம்மதி போவதில்லை.உடம்பு உருக்குலைவதில்லை.

·        
என்ன நடக்குமோ என்ற பயமும்
கவலையும்தான் மனிதன்மீது பாரமாக இறங்கி அவனை நொறுக்கிவிடுகின்றன.

·        
பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.நிதானத்தைக் கடைபிடியுங்கள்.

·        
ஆரவாரம் வேண்டாம்.அலட்டிக்
கொள்ளாதீர்கள்.பொறுப்புக்களை சீராக நிறைவேற்றுங்கள்.

·        
அவசியமற்ற சுமைகளைப் போட்டுக்
கொள்ளாதீர்கள்.

·        
அடிக்கடி ஓய்வெடுத்துக்
கொள்ளுங்கள்.

·        
தினசரி* *மத்தியானம் ஒரு
அரைமணி நேரம் தூங்குங்கள். இரவு பன்னிரண்டு மணிக்குமேல் எக்காரணத்தை முன்னிட்டும் விழித்திருக்காதீர்கள்.

·        
பத்துமணிக்கே படுத்துவிடுவது
உத்தமம். அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.

·        
மனம் தளராமல் தினந்தோறும்
ஆண்டவனை நினையுங்கள். இறைவா இன்று முழுக்கவும் என்னுடன் இருந்து என்னை ஆட்கொள் அபபனே.
என்னை எந்த தவறும் செய்ய விடாதே அப்பனே என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

·        
ஒவ்வொரு நாளும் முகத்தை
மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.

·        
டென்ஷன் இல்லாமல் இருங்கள்.
நூறு வயது வரை பென்ஷன் வாங்கலாம். ஸ்ட்ரெஸ் உண்டாக்கிக் கொண்டால், அட்ரஸ் இல்லாமல்
போய்விடுவீர்கள். அதனால்தான் சொல்லுகிறேன், கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்
என்று.

·        
முடிந்தால் அடுத்தவர்களுக்கு
உதவி செய்யுங்கள். ஒருபோதும் கெடுதல் நினைக்காதீர்கள்

·        
மரணம் நம்மை கண்டு ஓடவேண்டும்,
மரணத்தை கண்டு நாம் ஓடக்கூடாது.

வாழ்க வளமுடன். வேண்டும் சுபம்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

படித்தாலும் புரியாத புத்தகம் பெண்.

படிக்க தவறிய புத்தகம் தந்தை.

படிக்க விரும்பும் புத்தகம் அன்னை.

படித்தது புடித்து போகும் புத்தகம் மழலை.

தொலைக்க கூடாத புத்தகம்
வாழ்க்கை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம்..! உபயோகிக்கும் முறைகளை தெரிந்துகொள்ளுங்கள்

tamiltips

வாழைப்பூவின் மகிமை தெரியுமா? இனிமே கண்டிப்பா சேர்க்காம இருக்கவே மாட்டீங்க!!

tamiltips

கர்ப்பிணிக்கு மனநலம் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் தெரியுமா?

tamiltips

தொப்பை குறைய கிரீன் டீ எடுத்துக்கோங்க – தூக்கம் வராமல் அவஸ்தையா… கத்திரிக்காய் சாப்பிடுங்க – பெண்களே, வெள்ளைபடுதலுக்கு சீரகம்

tamiltips

கணினி முன் பலமணி நேரம் வேலை செய்பவரா நீங்கள்? அப்போ இந்த செய்தியை கண்டிப்பா படிங்க!

tamiltips

சாக்ரடீஸ்! உலக தத்துவங்களுக்கெல்லாம் முன்னோடியான கிரேக்க தத்துவரின் இறப்பு சூழ்ச்சிபற்றி தெரியுமா!

tamiltips