வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவியர் தேர்ச்சியே அதிகம். மாணவியர்கள் 93.64% பேர் தேர்ச்சி அடைந்திருக்க, மாணவர்கள் 88.57% தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது மாணவியரைவிட மாணவர்கள் 507% குறைவு.
இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி காட்டிய பள்ளிகளின் எண்ணிக்கை 1,281. தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை திருப்பூர் முதல் இடத்தையும், ஈரோடு இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
பொதுவாக விருதுநகர் மாவட்டமே முதல் இடத்தில் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தது. அதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் சிக்கல் ஏற்படுத்திவிட்டது. இந்த மாவட்டங்களில் மாணவர்களை கோழிப் பண்ணை போன்று அடைத்துவைத்து, ஹாஸ்டலில் சித்ரவதை செய்து தேர்ச்சி பெறச் செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அதை நிரூபிக்கும் வகையில்தான் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற பள்ளிகளை பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் கல்வியாளர்கள் வேண்டுகோள்.