·
பயணத்தின்போது எந்த காரணத்துக்காகவும் வலியை அடக்கக்கூடாது. உண்மையான வலியை அடக்குவது, தேவையற்ற விளைவுகள் ஏற்படலாம் என்பதால் வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
·
சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்போது குழந்தை பிறந்துவிடுமோ என்று அச்சப்பட வேண்டாம். இயல்பாக சிறுநீர் கழியுங்கள்.
·
பிரசவ வலி இன்னமும் வரவில்லை என்று உறுதியாக நம்புங்கள். ஏனென்றால் பனிக்குடம் உடைவதற்கும், வலி தொடங்குவதற்கும் குழந்தை பிறப்பதற்கும் நிச்சயம் இடைவெளி இருக்கும்.
·
பொதுவாக முதல் குழந்தைக்குத்தான் இந்த நேர இடைவெளி அதிகம் இருக்கும். அடுத்தடுத்த குழந்தைகளுக்கு இந்த இடைவெளி மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
அதனால் பனிக்குடம் உடையும்போது அல்லது அதற்கான முதல் அறிகுறி தென்படும்போதே மருத்துவமனைக்கு செல்வதற்கு தயாராக இருங்கள். எந்தக் காரணம் கொண்டும் பதட்டப்படுவது அல்லது அச்சப்படுவது அவசியம் இல்லை. இன்னமும் நிறைய நேரம் இருக்கிறது என்ற எண்ணத்துடனே பயணப்படுங்கள்.