சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒப்போ நிறுவும் தொடர்ந்து பல விதமான ஸ்மார்ட் போன்களை வெளியீட்ட வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது .
இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு புதிய ஸ்மார்ட் போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ஒப்போ . இந்த புதியவகை ஸ்மார்ட் போனின் பெயர் ஒப்போ ஏ5 எஸ்.
பொதுவாகவே ஒப்போ நிறுவனம் தங்களின் ஸ்மார்ட் போன்களில் கேமெராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.
அதேபோல் இந்த புதியவகை ஸ்மார்ட்போனிலும் கேமரா பிரிவில் தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றே கூறலாம் .
5.5 இன்ச் H.D டிஸ்பிலே கொண்ட இந்த போனில் ,கேமராவை பொறுத்தவரையில் 8 மெகா பிக்சல் செல்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்புறத்தில் 3மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் ஆகியவை இதில் உள்ளன.
மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு பய்(9.0) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் 4230 எம்ஏஎச் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள ஸ்மார்ட் போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.