துவரம் பருப்பில் அதிக அளவுக்கு புரதச்சத்து இருப்பதால், இதனை சூடான சாதத்துடன் கலந்து நெய் ஊற்றிக்கொடுத்தால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
• துவரம்பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஜீரணம் சிறப்பாக நடைபெறுகிறது. அத்துடன் பசியைத் தூண்டுகிறது.
• உடல் பருமன் மற்றும் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் மலக்கட்டினால் அடிக்கடி அவஸ்தைப்பட நேரிடும். அதனை குறைக்கும் தன்மை துவரைக்கு உண்டு.
• ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் துவரையில் நிறைந்திருப்பதால் கர்ப்பிணிகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
• துவரம் பருப்பை சீயக்காயுடன் சேர்த்து பொடியாக அரைத்துக்கொண்டு தலையில் தேய்துக் குளித்தால் அரிப்பு, பொடுகு சிக்கல்கள் தீரும்.
ஆரோக்கியம் மட்டுமின்றி அழகு தரும் தன்மையும் துவரையில் உள்ளது என்பதால் தினமும் ஏதேனும் ஒரு வகையில் துவரம் பருப்பை சமையலில் பயன்படுத்துவது குடும்ப ஆரோக்கியத்துக்கு நல்லது.