• கர்ப்பிணிகளின் உடலின் தன்மை, கர்ப்பம் அடையும் வயது, கர்ப்பத்தின் தன்மை போன்றவற்றைப் பொறுத்து ஒவ்வொரு நபருக்கும் அறிகுறிகள் மாறுபடலாம்.
• தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் சில பெண்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கலாம், சில பெண்கள் இப்படிப்பட்ட எந்த அறிகுறிகள் தென்படாமலும் கர்ப்பம் சுமக்கலாம்.
• ஒரே பெண்ணுக்குகூட, முதல் கர்ப்பத்திற்கும் அடுத்த கர்ப்பத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் தென்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
• பரம்பரைத்தன்மையை மையப்படுத்தி தாயைப் போன்றுதான் மகளுக்கும் கர்ப்ப அறிகுறிகள் இருக்கும் என்பதும் உண்மையல்ல, இதிலும் பெரிய அளவுக்கு வித்தியாசங்கள் தென்படலாம்.
அதனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்தில் நிகழ்ந்த அறிகுறிகளையும் கணக்கில்கொண்டு இப்படித்தான் நடக்கவேண்டும் என்று யாருக்கும் அறிவுரை கொடுப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஒவ்வொரு நபருக்கும் பிரசவ அறிகுறிகள் வெவ்வேறு வகையில் இருக்கும் என்பதுதான் உண்மை.