ஏனென்றால் இதனால் நேரம், செலவு போன்றவை மிச்சமாகிறது. அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெறும் அதிர்ஷ்டம் யாருக்கு அதிகமாக இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
பரம்பரைத்தன்மை
முதல் காரணமாக
அறியப்படுகிறது. குறிப்பாக
அம்மா அல்லது
சகோதரி இரட்டைக்
குழந்தை பெற்றிருந்தால்,
இவருக்கும் இரட்டைக்
குழந்தை உருவாக
அதிக வாய்ப்பு
உண்டு.
ஐந்துக்கு
குறைவாக குழந்தை
பெற்றவர்களுக்கும், 30 முதல்
37 வயதுக்குள் கருத்தரிப்பு
நிகழ்பவர்களுக்கும் இரட்டை
குழந்தைக்கு வாய்ப்பு
அதிகம்.
செயற்கை
முறை கருவூட்டலுக்கு
சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட
கருமுட்டை வெளியாகும்
வாய்ப்பு இருக்கிறது.
அதனால் இவர்களுக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட
கருத்தரிப்பு எளிதில்
நிகழ்கிறது.
டெஸ்ட்
டியூப் பேபி
முறையில் ஒன்றுக்கு
மேற்பட்ட சினைக்கருவை
பதியம் செய்து
வளர்ப்பதால், இரட்டைக்
குழந்தை கிடைப்பதற்கு
அதிக வாய்ப்பு
உண்டாகிறது.
இவை மட்டுமின்றி
கருத்தடை மாத்திரை
மூலம் கருத்தரிப்பை
தள்ளிப்போட்டு, அதன்பிறகு
கருத்தரிக்கும் பெண்களுக்கும்
ஒன்றுக்கு மேற்பட்ட
குழந்தை பிறப்பதற்கு
அதிக வாய்ப்பு
உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.