Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதால் இத்தனை சிக்கலா? தாய்மார்களே உஷார்!

பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்குவரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிக்கிறோம். பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை நேர பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்து அனுப்புகின்றோம். நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலை தருகிறதா?

இன்றைய காலக்கட்டத்தில் தாய்மார்கள் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பதால் அவர்களின் பசியை போக்குவதற்காக பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்திற்காக சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.

பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம். ஏனெனில் பிஸ்கட்டுகள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ஹைட்ரஜனேட் கொழுப்புகள் (பதப்படுத்தி) குழந்தைகளுக்கு ஒபிசிட்டி பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.

பிஸ்கட்டுகளில் கலோரிகள் அதிகம் உள்ளதால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிஸ்கட் செரிமானம் ஆக, குறைந்தது ஒரு மணிநேரமாவது தேவைப்படுகின்றது. குழந்தைகள், இரண்டு அல்லது மூன்று பிஸ்கட்டுகளை ஒரே நேரத்தில் சாப்பிடும்போது அவர்களுக்கு பசியின்மை ஏற்படுகிறது. இதனால் மற்ற உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்ப்பார்கள். சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிடுகையில், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும்.

Thirukkural

கிரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃப்ளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. அதன் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லோருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைகொண்ட பிஸ்கட்டுகளை சாப்பிடும்போது, குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படும். சிலர் குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிட கொடுக்கும்போது, உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து, செரிமானக் கோளாறுகளும் ஏற்படுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

புத்திக் கூர்மைக்கு வெண்டை எப்படி சாப்பிடவேண்டும் ??

tamiltips

ரூ. 34,000 ஐ தாண்டிய தங்கம் விலை! ஒரே நாளில் ரூ. 576/- குறைந்துள்ளது!

tamiltips

கர்ப்பிணி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

tamiltips

பித்தம் நீக்கும் சக்தி அகத்திக்கு உண்டாம் – சப்போட்டா சாப்பிட்டா ஆண்மைக் குறைவு நீங்குமாம் – கொண்டைக்கடலை இதயத்தின் நண்பன்

tamiltips

கர்ப்பிணிகளே இது உண்மையா இல்ல மூட நம்பிக்கையா ?? முதல் குழந்தை எப்போதும் தாமதமாகத்தான் பிறக்குமா?

tamiltips

உங்க குழந்தையை தூங்கவைக்க ரொம்ப கஷ்டப்படுறிங்களா! இதோ அதற்கான வழிகள்!

tamiltips