குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், பெரியவர்களுக்கு தேவையான சத்துகள் என்னென்ன எனப் பார்க்கலாம். அந்த சத்துகள் எந்தெந்த உணவுகளிலிருந்து பெற முடியும் என்பதையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். எவ்வளவு சத்துகள் கிடைக்கும் என்பதும் தெரிந்து கொள்ளுங்கள்.
சத்துகள்… உணவுகள்… அளவுகள்…
விட்டமின் ஏ
- கண் பார்வை திறன் மேம்பட உதவுகிறது.
- சருமம் பாதுகாக்கப்படும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- நரம்புகள், எலும்புகள் உறுதியாக உதவும்.
- விட்டமின் ஏ குறைந்தால் கண் நோய்கள், தோல் பாதிப்பு ஏற்படும்.
உணவுகள்
- கீரை வகைகள்
- மாம்பழம்
- பப்பாளி
- கேரட்
- பரங்கிக்காய்
- தக்காளி
- முருங்கைக்காய்
- வெண்ணெய்
- நெய்
- முட்டையின் மஞ்சள் கரு
- பால்
- சீஸ்
- நண்டு
- ஆட்டின் ஈரல்
எவ்வளவு சத்துகள்?
- குழந்தைகள் – 750 மை.கி
பெரியவர்கள் – 900 மை.கி
கருவுற்ற/பாலூட்டும் பெண்கள் – 900 மை.கி
விட்டமின் டி
- எலும்பு, பற்கள் வளர்ச்சிக்குத் தேவை.
- பாஸ்பரஸ் சத்துகளை கிரகிக்க விட்டமின் டி தேவை.
- இச்சத்து குறைந்தால் ஒழுங்கற்ற எலும்பு அமைப்பு பிரச்னை குழந்தைகளுக்கு வரும்.
- கர்ப்பிணிகளுக்கு ஆஸ்டியோமலேசியா என்ற எலும்பு தொடர்பான நோய், கண், தோல் பாதிப்பு போன்ற பாதிப்புகள் வரும்.
Image Source : LifestyleTips
உணவுகள்
- மீன்
- மீன் எண்ணெய்
- முட்டையின் மஞ்சள் கரு
- வெண்ணெய்
- நெய்
- பால்
- சூரிய ஒளியிலிருந்து அதிகமாக கிடைக்கும்.
எவ்வளவு?
- வளரும் குழந்தைகள் – 15 மை.கி
- பெரியவர்கள் – 45 மை.கி
இதையும் படிக்க : பாரம்பர்ய அரிசியில் செய்ய கூடிய இனிப்பு தோசை ரெசிபி
விட்டமின் ஈ
- விட்டமின் ஏ, தாதுக்கள், செலினியம் ஆகியவற்றை உடலில் தக்க வைக்க உதவுகிறது.
- சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
- தசைகளை வலுவாக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- இனப்பெருக்கத்துக்கு உதவும்.
- இளமையைத் தக்க வைக்க உதவும்.
- இச்சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் சோர்வாகும். கவனக்குறைவு ஏற்படும். பெண்களுக்கு கருத்தரிக்காமை, ஆண்களுக்கு விந்து உற்பத்தி குறைவு ஏற்படும்.
உணவுகள்
- சூரிய காந்தி எண்ணெய்
- முளைகட்டிய கோதுமை எண்ணெய்
- ரவை
- முட்டை
எவ்வளவு?
- அனைவருக்கும் தினமும் 15-30 மி.கி தேவை
விட்டமின் கே
- உரிய சமயத்தில் ரத்தம் உறைய வைக்க விட்டமின் கே உதவுகிறது.
- இச்சத்து குறைந்தால் விபத்து மற்றும் பிரசவ நேரத்தில் அதிகமான ரத்தம் போகும் ஆபத்து அதிகம்.
உணவுகள்
Image Source : Pinterest
- அனைத்துக் கீரைகள்
- முட்டைக்கோஸ்
- கேரட்
- காலிஃப்ளவர்
- பச்சை காய்கறிகள்
- பால் பொருட்கள்
- ஈரல்
- முட்டை
- கடற்பாசி
எவ்வளவு?
- அனைவருக்கும் தினமும் விட்டமின் கே 80 மி.கி தேவை
விட்டமின் பி
- உடலின் வளர்சிதை மாற்றத்துக்குத் துணை புரியும்.
- தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
- இச்சத்து குறைந்தால் கை, கால் வீக்கம், உடல் சோர்வு, காய்ச்சல், தசைகளில் வளர்ச்சியின்மை, நரம்புகள் வலுவிழத்தல், பெரி பெரி நோய் வரலாம்.
இதையும் படிக்க : ஊட்டச்சத்துகளைத் தரும் ஹெல்தியான சாலட் ரெசிபி…
உணவுகள்
- முளைக்கட்டிய பயறு
- உலர் ஈஸ்ட்
- முழு தானியங்கள்
- எண்ணெய் வித்துகள்
- ஈரல்
- கைக்குத்தல் அரிசி
எவ்வளவு?
- வளரும் குழந்தைகள் – 1.2 மி.கி
- பெரியவர்கள் – 1.4 மி.கி
- கருவுற்ற/பாலூட்டும் பெண்கள் – 1.3 மி.கி
விட்டமின் பி2
- உடலில் ஆற்றல் அதிகரிக்க உதவும்.
- வளர்சிதை மாற்றம் சீராகும்.
- நாக்கு, தோல் பாதுகாப்பதற்கு உதவும்.
- இச்சத்து குறைந்தால் வாய், உதடு, நாக்கு, குடல் பகுதிகளில் புண்கள் வருகின்றன.
உணவுகள்
Image Source : Joy of koshar
- உலர் ஈஸ்ட்
- தானிய மாவு வகைகள்
- கோதுமை
- கீரைகள்
- பச்சை காய்கறிகள்
- பால்
- வெண்ணெய்
- முட்டை
- ஈரல்
எவ்வளவு?
- வளரும் குழந்தைகள் – 0.8 மி.கி
- பெரியவர்கள் – 1.4 மி.கி
- கருவுற்ற/பாலூட்டும் பெண்கள் – 1.8 மி.கி
நியாசின் பி3
- சீரண மண்டலம் செயல்பட உதவும்.
- நரம்பு அமைப்பு நலமாகும்.
- தோல் பாதுகாக்கப்படும்.
- வளர்சிதை மாற்றம் உதவும்.
- இச்சத்து குறைந்தால் உடற்சோர்வு, வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் உண்டாகின்றன.
உணவுகள்
- முழு தானியங்கள்
- முழு பருப்பு வகைகள்
- கீரைகள்
- மீன்
- பீன்ஸ்
- நிலக்கடலை
- உலர் ஈஸ்ட்
எவ்வளவு?
- வளரும் குழந்தைகள் – 8 முதல் 1.0 மி.கி
- பெரியவர்கள் – 16 மி.கி
- கருவுற்ற/பாலூட்டும் பெண்கள் – 18 மி.கி
இதையும் படிக்க : 40+ வயதுக்கு மேல் சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்?
பான்தோதெனிக் ஆசிட் பி5
- கார்போஹைட்ரேட், புரதச்சத்து கிரகிக்க உதவும்.
- வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.
- இது குறைந்தால் உடல் வளர்ச்சி குறையும். நரம்பு தொடர்பான பிரச்னைகள் வரும். தோல் நோய், ஈரல் வீக்கம், முடி உதிர்தல் ஆகியவை ஏற்படும்.
உணவுகள்
Image Source : Read and Digest
- ஈரல்
- உமி
- தவிடு
- கோதுமை தவிடு
- முழு தானியங்கள்
- முழு பயறு
- எண்ணெய் வித்துகள்
- முட்டை
- உலர் ஈஸ்ட்
எவ்வளவு?
- பிறந்த குழந்தைகள் – 2 மி.கி
- வளரும் குழந்தைகள் – 5 மி.கி
- பெரியவர்கள் – 6 மி.கி
இதையும் படிக்க : கர்ப்பக்கால சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க… சாப்பிட வேண்டிய 22 உணவுகள்…
பைரிடாக்சின் பி6 (Pyridoxine)
- நரம்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவும்.
- இச்சத்து குறைந்தால் ரத்தசோகை, வளர்ச்சி குறைபாடு வரும்.
உணவுகள்
- உமி
- தவிடு
- முளைக்கட்டிய பயறு
- கீரை வகைகள்
- இறைச்சி
- ஈரல்
- உலர் ஈஸ்ட்
எவ்வளவு?
- குழந்தைகள் – 0.4 மி.கி
- வளரும் குழந்தைகள் – 1.2 மி.கி
- பெரியவர்கள் – 2 மி.கி
இதையும் படிக்க : குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 13 மாலை நேர ஸ்நாக்ஸ்…
ஃபோலிக் ஆசிட் பி9
- ரத்த அணுக்கள் உற்பத்தியாக உதவும்.
- செல்களின் வளர்சிதை மாற்றம் தூண்டுதலுக்கு உறுதுணையாகும்.
- இச்சத்து குறைந்தால் ரத்தசோகை வரும். கர்ப்பிணி பெண்கள் ரத்தசோகயால் பாதிக்கப்படுவர்.
உணவுகள்
- கீரைகள்
- ஓட்ஸ்
- முழுக்கோதுமை
- கொண்டைக்கடலை
- காராமணி
- கொத்தவரங்காய்
- வெண்டைக்காய்
- எள் எண்ணெய்
- முட்டை
- ஈரல்
- உலர் ஈஸ்ட்
எவ்வளவு?
- வளரும் குழந்தைகள் – 180 முதல் 200 மி.கி
- பெரியவர்கள் – 300 மி.கி
- கருவுற்றவர்கள் – 500 மி.கி
- பாலூட்டும் பெண்கள் – 400 மி.கி
சையனோகோபாலமின் பி12
- ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவும்.
- இச்சத்து குறைந்தால் ரத்தசோகை உண்டாகும்.
உணவுகள்
Image Source : Tesco Real Food
- ஈரல்
- இறைச்சி
- மீன்
- முட்டை
- பால் உணவுகள்
எவ்வளவு?
- பிறந்த குழந்தைகள் – 1 மி.கி
- வளரும் குழந்தைகள் – 2.4 மி.கி
- பெரியவர்கள் – 4 மி.கி
- கருவுற்றவர்கள் – 6 மி.கி
- பாலூட்டும் பெண்கள் – 8 மி.கி
இதையும் படிக்க : எந்த நோயும் வராமல் தடுக்க என்னென்ன உணவுகளை குழந்தைக்கு தரலாம்?
விட்டமின் சி
- எலும்புகள் உள்ள நுண்ணிய செல்களை உற்பத்தி செய்யும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
- உயிரியல் ரசாயன மாற்றம் ஏற்படுவதில் உதவும்.
- இச்சத்து குறைந்தால் ஸ்கர்வி எனும் நோய் பாதித்து பல் ஈறில் ரத்தம் வசிதல், சளி பிடிப்பது ஆகியன ஏற்படும்.
உணவுகள்
- நெல்லிக்காய்
- சிவப்பு கொய்யா
- எலுமிச்சை
- ஆரஞ்சு
- அன்னாசி
- முளைக்கட்டிய பயறு வகைகள்
- கீரைகள்
- பழங்கள்
எவ்வளவு?
- குழந்தைகள் – 25 மி.கி
- வளரும் குழந்தைகள் – 80 மி.கி
- பெரியவர்கள் – 200 மி.கி
- கருவுற்றவர்கள் – 300 மி.கி
- பாலூட்டும் பெண்கள் – 300 மி.கி
இதையும் படிக்க : ஹோம்மேட் ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி?
கால்சியம்
- எலும்பு. பற்களின் வளர்ச்சி, ரத்தத்தில் உறைய வைக்கக்கூடிய தன்மை அதிகரிக்கும்.
- இதயம், தசைகள், எலும்புகள், பற்கள் பாதுகாக்கும்.
- நரம்பு செல்கள், திசுக்கள் சீராக கால்சியம் பயன்படும்.
- இச்சத்து குறைந்தால் பெரியவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ், உயர வளர்ச்சி தசை, எலும்பு வளர்ச்சியின்மை உண்டாகும்.
உணவுகள்
- பால்
- சீஸ்
- கீரை வகைகள்
- கேழ்வரகு
- எள்
- சிறிய வகை மீன்
எவ்வளவு?
- பிறந்த குழந்தைகள் – 500 மி.கி
- வளரும் குழந்தைகள் – 600 மி.கி
- பெரியவர்கள் – 600 மி.கி
- கருவுற்றவர்கள் – 1200 மி.கி
- பாலூட்டும் பெண்கள் – 1200 மி.கி
பாஸ்பரஸ்
- செல்களின் வளர்ச்சிக்கு உதவும்.
- வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும்.
- எலும்பு, பற்கள் பாதுகாக்கும்.
- கொழுப்பை கட்டுப்படுத்தும்.
- இச்சத்து குறைந்தால் எலும்பு வளர்ச்சி குறையும். தசை எலும்பு வலுவிழக்கும். வளர்ச்சியின்மை நோய்கள் வரும்.
உணவுகள்
Image Source : 4s foods
- பால்
- சீஸ்
- பருப்பு
- முழுத்தானியங்கள்
எவ்வளவு?
- பிறந்த குழந்தைகள் – 400 மி.கி
- வளரும் குழந்தைகள் – 600 – 700 மி.கி
- பெரியவர்கள் – 800 மி.கி
- கருவுற்றவர்கள் – 1200 மி.கி
- பாலூட்டும் பெண்கள் – 1200 மி.கி
சோடியம்
- கார அமிலத்தன்மை சீர்ப்படும்.
- ரத்த திசுக்களின் அழுத்தம் கட்டுப்படும்.
- இதயத் துடிப்பு சீராகும்.
- இச்சத்து குறைந்தால் இதயம், சிறுநீரக நோய், கால் வீக்கம், குறைந்த ரத்த அழுத்தம் நோய்கள் உண்டாகின்றன
உணவுகள்
- சிப்ஸ்
- அப்பளம்
- கருவாடு
- வற்றல்
- ஊறுகாய்
எவ்வளவு?
- அனைவருக்கும் 5-10 கிராம் போதும்.
இதையும் படிக்க : குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும் 20 உணவுகள்…
பொட்டாசியம்
- உடலில் கார அமிலத்தன்மை சீர்படும்.
- ரத்த செல்கள் அழுத்தம் கட்டுப்படும்.
- இதயத் துடிப்பு இயல்பாகும்.
- இச்சத்து குறைந்தால் நீர்ச்சத்து குறையும். பக்கவாதம் வரலாம்.
உணவுகள்
- இளநீர்
- பருப்பு வகைகள்
- காய்கறிகள்
- பழங்கள்
- இறைச்சி
- மீன்
எவ்வளவு?
- குழந்தைகள் – 2000 – 3000 மி.கி
- பெரியவர்கள் – 3500 மி.கி
இரும்பு
- ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
- வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.
- இச்சத்து குறைந்தஅல் மூச்சுத்திணறல், மயக்கம், உடற்சோர்வு, கணுக்கால் வீக்கம், தோல் வெளுத்தல், மைக்ரோ சைடிக் அனிமியா, உடல் வளர்ச்சி தடை ஏற்படும்.
Source : Organic Facts
உணவுகள்
- வெல்லம்
- பேரீச்சை
- கீரை வகைகள்
- முழுப்பயறு
- ஈரல்
- மீன்
- இறைச்சி
- சுண்டைக்காய்
- தாமரைத்தண்டு வற்றல்
- முட்டையின் மஞ்சள் கரு
எவ்வளவு?
- ஆண்கள் – 27 யுனிட்
- பெரியவர்கள் – 17 யுனிட்
- கர்ப்பிணி/தாய்மார்கள் – 21 யுனிட்
அயோடின்
- வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.
- தைராய்டு ஹார்மோன் உற்பத்தியாகும்.
- தைராய்டு சுரப்பியின் செயல்பாடு சீராகும்.
- இச்சத்து குறைந்தால் முன் கழுத்து கழலை நோய், இரும்புச்சத்து குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு ஆகியவை வரும்.
உணவுகள்
- இந்துப்பு
- நண்டு போன்ற ஓடு உள்ள கடல் வாழ் உயிரினங்கள்
- பசலைக்கீரை
- முட்டை
- பால்
எவ்வளவு?
- பிறந்த குழந்தைகள் – 50-70 மை.கி
- வளரும் குழந்தைகள் – 90-120 மை.கி
- பெரியவர்கள் – 150 மை.கி
இச்சத்துகளின் தேவையை புரிந்துகொண்டு அதன்படி உங்களின் அன்றாட உணவை ஆரோக்கியமாக அமைத்துக் கொள்வது நல்லது.
இதையும் படிக்க : மறந்துவிட்ட 5 முக்கிய ஊட்டச்சத்துகள்… இந்த உணவுகளை சாப்பிட்டால் சில நோய்கள் வராது…