சர்க்கரை நோய் வராமல் தடுக்க உணவிலே நாம் சரியான மாற்றத்தைப் பின்பற்றி வந்தால் சர்க்கரை நோய் வராது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பெரியவர்கள் ஆகியோர் சர்க்கரை நோயை வராமல் தடுக்கும் உணவுகளைத் தெரிந்து கொண்டு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.
பெரியவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் என நாம் அனைவருக்கும் தெரியும். குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வரும் எனத் தெரியுமா? கர்ப்பக்காலத்தில் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பிறக்கும் குழந்தைக்கு சர்க்கரை நோய் வரக்கூடும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… சர்க்கரை நோய் வராமல் இருக்க உதவும் உணவு முறை…
வெந்தயம்
ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட விரைவில் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
சர்க்கரையை எரித்து, விரைவில் ஆற்றலாக மாற்றுகிறது வெந்தயம்.
பாதாம்
2-4 பாதாம்களை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலை பாதாம்களை சாப்பிட சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
தானியங்கள்
கொண்டைக்கடலை, பட்டாணி, முளைத்த பயறுகள், பருப்புகள், சிறுதானியங்கள் ஆகியவற்றைச் சாப்பிட சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
இதையும் படிக்க: உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி?
நார்ச்சத்து உணவுகள்
அவரை, வாழைத்தண்டு, பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், கீரைகள் ஆகியவை சாப்பிட சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
ஒமேகா 3 சத்துள்ள உணவுகள்
மீன், எள், ஃபிளாக்ஸ் விதைகள் ஆகியவற்றை சாப்பிட்டு வர ஓமேகா 3 சத்துகள் கிடைக்கும். சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும்.
இதையும் படிக்க: குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் 15 உணவுகள்
பழங்கள்
சிவப்பு கொய்யா, கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பேரிக்காய், அத்தி ஆகியவை சர்க்கரை நோய் வராமல் கட்டுப்படுத்தும்.
உணவு முறை
- சிறுதானிய சாதம்
- காய்கறி உப்புமா
- சம்பாகோதுமை உப்புமா
- வெந்தயக்களி
- சிறுதானிய இட்லி, தோசை
ஆகியவை சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கும்.
உணவுப் பழக்கம்
காலை உணவில் நார்ச்சத்துள்ள உணவுகள் – காய்கறி, பழங்கள்
மதிய உணவில் கார்போஹைட்ரேட்
இரவு உணவில் எளிய கார்போஹைட்ரேட், புரதம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.
பாகற்காய் பொடி
பாகற்காயைக் காய வைத்துப் பொடியாக்கி காலை, இரவு என 5 கிராம் அளவு சாப்பிட்டு வரலாம்.
ஊறவைத்த வெண்டைக்காய்
தண்ணீரில் ஊறவைத்த வெண்டைக்காயை நன்கு மென்று சாப்பிட்டு வரலாம்.
இதையும் படிக்க: கர்ப்பக்கால சர்க்கரை நோயைத் தவிர்க்கும் உணவுகள்
திரிபலாப் பொடி
நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் கூட்டணி. 1-2 கிராம் அளவுக்கு காலை, இரவு சாப்பிட்டு வர சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோயும் அண்டாது.
சீரகம்
- சீரகம், கருஞ்சீரகம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும்.
- சீரக குடிநீர் குடிப்பது மிகவும் நல்லது.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கீரைகள்
- கறிவேப்பிலை
- தூதுவளை
- காசினிக்கீரை
- புளிச்சக்கீரை
- லட்சக்கட்டை கீரை
- முசுமுசுக்கை
- வெந்தயக்கீரை
- துத்திக்கீரை
- முருங்கைக்கீரை
- மணத்தக்காளி கீரை
- அகத்திக்கீரை
- சிறுகீரை
- அரைக்கீரை
- வல்லாரை
- கொத்தமல்லி
சாப்பிட வேண்டியவை
- கம்பு
- கேழ்வரகு
- தினை
- வரகு
- குதிரைவாலி
- சிவப்பு அரிசி
- மட்டை அரிசி
- சம்பா ரவை
- பார்லி
- சோளம்
- மக்காச்சோளம்
- பாதாம்
- முந்திரி
- நிலக்கடலை
- பிஸ்தா
- வால்நட்
இதையும் படிக்க: தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
அடிக்கடி சாப்பிட வேண்டியவை
- பாகற்காய்
- சுரைக்காய்
- வாழைத்தண்டு
- முள்ளங்கி
- கொத்தவரக்காய்
- வெள்ளரிக்காய்
- அவரைக்காய்
- காராமணி
- முருங்கைக்காய்
- முருங்கைக்கீரை
- கத்திரிக்காய்
- கோவைக்காய்
- சின்ன வெங்காயம்
- பூசணி
- வாழைப்பூ
- பீர்க்கங்காய்
- வெண்டைக்காய்
- முட்டைக்கோஸ்
- நூல்கோல்
- சௌசௌ
தவிர்க்க வேண்டியவை
- பாக்கெட் உணவுகள்
- சாக்லெட்
- வெள்ளை சர்க்கரை
- கேக்
- பிஸ்கெட்
- பரோட்டா
- ரெடி டூ ஈட் உணவுகள்
இந்த உணவுமுறைகளை சரியாகப் பின்பற்றி வருபவருக்கு சர்க்கரை நோய் வராது.