Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ இயற்கையான ஒரு சிறந்த ஒரு வழி!

உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜூஸ் மூலம் உடல் எடையைக் குறைப்பது. சிலர் உடல் எடையைக் குறைக்க டயட் இருக்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படி இருந்தால், அவர்களின் உடல் எடை குறையும். ஆனால் அதே சமயம் அவர்களின் உடலில் உள்ள சத்துக்கள் குறைந்து, அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்.! எனவே எப்போது உடல் எடையைக் குறைக்க நினைத்தாலும், தினமும் போதிய சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்படி டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

ஒருவேளை உங்களால் டயட் இருக்க முடியாவிட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற ஜூஸை மட்டும் தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!! இந்த பச்சை நிற ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடலுக்கு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை சீராக கிடைத்து, உடல் எடையும் குறையும். சரி, இப்போது அந்த ஜூஸ் எப்படி செய்வது என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காண்போம்.

பார்ஸ்லி இந்த பச்சை நிற ஜூஸானது பார்ஸ்லி கொண்டு செய்யப்படுவதாகும். பார்ஸ்லியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதோடு, வைட்டமின் சி, கே மற்றும் ஈ போன்றவையும் ஏராளமாக நிறைந்துள்ளது.R

ஜூஸ் செய்யும் முறை 1 கட்டு பார்ஸ்லி 1 எலுமிச்சை 1 கப் தண்ணீர் முதலில் பார்ஸ்லியை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அந்த சாற்றில் எலுமிச்சையை பிழிந்து, 1 கப் தண்ணீர் ஊற்றி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஆனால் வெறும் 5 நாட்கள் மட்டும் குடிக்க வேண்டும். பின் 10 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் 5 நாட்கள் குடிக்க வேண்டும். இப்படி செய்தால் உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

Thirukkural

புற்றுநோயைத் தடுக்கும் பார்ஸ்லியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும். கர்ப்பிணிகள் கூடாது கர்ப்பிணிகள் பார்ஸ்லியை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அது மாதவிடாயைத் தூண்டி, கருவை கலைத்துவிடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்கு காலை உணவை தவிர்க்கும் பெற்றோர்களே அதன் பின்விளைவுகள் தெரியுமா!!

tamiltips

பேபி புளூஸ் – அப்படின்னா என்னன்னு தெரியுமா ??

tamiltips

சிறுநீர் பிரச்னைகளுக்கு கரும்பு சாறு அரும்மருந்தாக இருக்கிறது !!மருத்துவ செய்தி..

tamiltips

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி குறையுமா? நெல்லிக்காய் குளிர்ச்சியா சூடா??

tamiltips

குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனையா இருக்கா? அப்போ இதை செய்யுங்க போதும்!

tamiltips

ஜியோ வழங்கும் அடேங்கப்பா ஆஃபர்! ரூ.600க்கு பிராட்பேண்ட், லேண்ட்லைன், கேபிள் சேவை!

tamiltips