உங்கள் துணையுடன் உடலுறவு மேற்கொள்ளும்போது சரியான நேரத்தை தேர்வு செய்யுங்கள். உங்கள் துணையும் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். முறையான உடலுறவு மேற்கொள்வதன் மூலம் கர்ப்பம் ஆகாமல் பாதுகாப்புடன் இருப்பதோடு பாலின நோய்களில் இருந்தும் பாதுகாப்போடு இருக்கலாம்.
பாதுகாப்பான் உடலுறவுக்கு ஆணுறைகள், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் அல்லது உதரவிதானம் பயன்படுத்தலாம் ஆணுறை மிகவும் சிறந்த தேர்வாகும். ஆணுறை கருத்தரித்தல் மற்றும் பாலின நோய்களில் இருந்து காக்கும். உங்கள் ஆணுக்கு விறைப்பு ஏற்படுகிற நேரத்தில் தான் ஆணுறையை தேடும் நிலை ஏற்படும் எனவே முன்கூட்டிய வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக ஒரு பெண் கன்னித்தன்மை உடையவள் என்றால் அவள் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்தக்கசிவு ஏற்படுமாம். ஆனால் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது எல்லா பெண்களுக்குமே இரத்த கசிவு ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் கன்னிச்சவ்வு என்பது பெண்ணுறுப்பின் திறப்பின் மீது உள்ள மிகவும் மென்மையான திசுவாகும்.
ஓடுதல், குதித்தல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், உடற்பயிற்சி செய்தல் போன்ற பல விதமான இயல்பான நடவடிக்கைகளால் கூட இந்த கன்னிச்சவ்வு மிக எளிதில் பிரிந்து விடும். உடனே உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய வேண்டும் என நினைக்காதீர்கள். அது நடக்கும் நேரத்தில் நடக்கட்டும்.
முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுவது இயல்பான ஒன்றே. சில நேரம் சற்று இரத்தக் கசிவு இருக்கலாம். ஆனால் வலி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். வலி என்பது கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே. சிறிது நேரம் கழித்து அதில் நீங்கள் சுகம் காண ஆரம்பித்து விடுவீர்கள்.
பாலுணர்வை ஊட்டும் விளையாட்டுகளான அடல்ட்ஸ் ஒன்லி உரையாதல், ஸ்பரிசம், முத்தம் ஆகியன மேற்கொள்ளலாம். பாலுணர்வை ஊட்டும் விளையாட்டுக்களில் ஈடுபடும் போதே அவருக்கு விந்துதள்ளல் ஏற்படலாம். அதனால் வருத்தமடையாதீர்கள், சிறிது நேர இடைவேளைக்கு பின் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
உடலுறவுக்கு முன் குளிப்பது நல்ல ஐடியாவாகும். குளித்து விட்டு ஆரம்பித்தால் போர்வைக்குள் இருவரும் சூடாவதோடு மட்டுமல்லாது, உங்கள் அந்தரங்க பாகங்களும் சுத்தமாவதால், உடலுறவின் போது நற்பதத்துடன் உணர்வீர்கள். உடலுறவுக்கு பின் இனப்பெருக்க உறுப்பை கண்டிப்பாக வெதுவெதுப்பான நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதனால் தொற்றுக்கள் ஏதும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.