பாலுறவு நிபுணர் ஒருவரை அணுகிய ராதிகா சர்மா என்ற பெண், பாலுறவின் போது ஆபாசப் படம் பார்க்கும் தனது கணவரின் பழக்கம் நீண்ட நாட்கள் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாதது என்றும் அதற்கு தீர்வளிக்குமாறும் கோரினார்.
அவரது அனுபவம் உண்மைதான் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆபாசப் படம் பார்ப்பதால் பெண்கள் மற்றும் ஆண்களிடையே ஏற்படும் உணர்வு நிலை வித்தியாசம் குறித்த ஆய்வு அமெரிக்காவின் விர்ஜினியா காமன்வெல்த் பலக்லைகக் கழகத்தை சேர்ந்தவர்களால் மெற்கொள்ளப்பட்டது.
18 முதல் 29 வயது வரையுள்ள 706 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உறவின் போது ஆபாசப் படம் பார்ப்பது ஆண்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தினாலும், பெண்களுக்கு உடல் ரீதியாக ஒரு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
அது உணர்வு ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதால் பெண்கள் உறவில் முழுமையான ஈடுபாட்டுடன் பங்கேற்பதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் கணவன் அல்லது துணை தங்களை நினைத்தபடியே உறவில் ஈடுபட விரும்புகின்றனர். ஆபாச படம் என்று வரும் போது கணவன்கள் அந்த பக்கம் கவனத்தை திருப்புவது பெண்களுக்கு பிடிப்பதில்லை.3
அதே சமயம் ஒரு சில பெண்கள் ஆபாச படம் பார்த்தால் தான் தங்களுக்கு உறவில் ஈடுபடும் எண்ணமே வருவதாக கூறி ஆராய்ச்சியாளர்களையே அதிர வைத்துள்ளனர்.