வெந்நீர் குடித்தால்
உங்கள் உடலில்
போடும் அதிகப்படி
சதை குறைக்கவும் பயன்படுகிறது. காலையில்
சரியாக மலம்
கழிக்க முடியவில்லை
என்று ஃபீல்
பண்ணுகிறீர்களா? எடுங்கள்
வெந்நீரை! குடியுங்கள்
உடனே! இம்மீடியட்
எஃபெக்ட் கிடைக்கும்
உடம்பு வலிக்கிற
மாதிரி இருக்கிறதா?
உடனே வெந்நீரில்
கொஞ்சம் சுக்குத்தூள்,
பனங்கற்கண்டு போட்டு
குடியுங்கள். இதன்
மூலம் பித்தத்தினால்
வரும் வாய்க்கசப்பு
மறைந்து விடும்.
மேலும், உடல்
வலிக்கு, நன்றாக
வெந்நீரில் குளித்துவிட்டு,
இந்த சுக்கு
வெந்நீரையும் குடித்துவிட்டுப்
படுத்தால், நன்றாகத்
தூக்கம் வருவதோடு,
வலியும் பறந்துவிடும்.
எங்காவது அலைந்துவிட்டு
வந்து கால்
பாதங்கள் வலிக்கிறது
என்றால், பெரிய
பிளாஸ்டிக் டப்பில்
கால் சூடு
பொறுக்குமளவுக்கு வெந்நீர்
ஊற்றி அதில்
உப்புக்கல்லைப் போட்டு,
அதில் கொஞ்ச
நேரம் பாதத்தை
வைத்து எடுங்கள்.
கால் வலி
மறைவதோடு, பாதமும்
சுத்தமாகிவிடும்.
வாரத்திற்கு ஒரு
முறையேனும் உங்கள்
கைகளை வெந்நீரில்
கொஞ்ச நேரம்
வைத்திருங்கள். இதன்
மூலம் நக
இடுக்கில் இருக்கும்
அழுக்குகள் போய்,
உங்கள் கைகள்
ஆரோக்கியமாக இருக்கும்.
வெயிலில் அலைந்து
விட்டு வந்து
உடனே சில்லென்று
ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட,
சற்றே வெதுவெதுப்பான
வெந்நீர் அருந்துவது,
தாகம் தீர்க்கும்
நல்ல வழி.