செலரியை பச்சையாக சாப்பிட வேண்டும். செலரியை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி, படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட்டால் நீண்ட நேரம் உடல்உறவு நீடிக்கும்.
பாலுணர்ச்சியைத் தூண்டும் மற்றொரு உணவு கடல் சிப்பி. கடல் சிப்பி விந்தணுக்களை அதிகரிக்க உதவுகிறது. கடல் சிப்பியில் பாலுணர்ச்சியை அதிகரிக்க உதவும் ஹார்மோன் உள்ளது.
வாழைப்பழத்தில் புரோமெலைன் நொதி உள்ளதால் பாலுணர்ச்சியைத் தூண்டும், ஆணின் மலட்டுத்தன்மையைப் போக்கும். மேலும் இப்பழத்தில் உள்ள பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், ஒட்டுமொத்த உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.
பாதாமில் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் ஆண்கள் சாப்பிட்டால் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். பாதாமை உப்பு ஏதும் சேர்க்காமல் பச்சையாக சாப்பிடுங்கள்.
முட்டையில் வைட்டமின் பி6, வைட்டமின் பி5 போன்றவை அதிகம் உள்ளதால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சீராக்க உதவுகிறது. மன அழுத்தத்தை எதிர்க்கும்.
உடலுறவில் ஈடுபடும் முன் பூண்டு, அத்திப்பழம் சாப்பிடலாம். பூண்டில் உள்ள அல்லிசின், அந்தரங்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.