சில உணவுகளை பச்சையாக சாப்பிட வேண்டும் எனவும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது.
முளைத்த தானியங்கள் மற்றும் முழு தானிய ரொட்டிகள் பச்சையாக சாப்பிட்டால் பாலியல் ஹார்மோன்கள் அதிகரிக்கும். விட்டமின் பி காம்ப்ளக்சை அதிகமாக கொண்டுள்ள தானியங்கள் உடலில் அனைத்து அமைப்புகளையும் சீராக்கும் மற்றும் லிபிடோவை அதிகரிக்கும்.
விட்டமின் பி3 உள்ள நியாசின் அவகேடா, கீரை போன்ற பொருட்கள் உடலுறவின் போது உணர்திறனை அதிகரிக்கின்றன. நியாசின் அனைத்து உறுப்பு மற்றும் சுரப்பி அமைப்புகளுக்கும் இரத்த ஓட்டத்தை அனுமதிக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு, ராஸ்பெர்ரி, கேரட் போன்றவற்றை உண்டால், இரு பாலினத்தாருக்கும் காம ஆசையை தூண்டி நீண்ட நேரம் உறவில் ஈடுபட வழிவகுக்கிறது. இவற்றை ஒரு இயற்கை வயகரா என்றே சொல்லலாம்.
சாலட் முளைத்த கொட்டைகள், விதைகள், தானியங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் பாலியல் ஆசை, உணர்திறன் மற்றும் இன்பத்திற்கு இன்றியமையாதவை. பட்டாணி, கடுகு, ப்ரோக்கோலி, பாதாம், பூசணி விதைகள், சியா விதைகள், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து செய்யும் சாலட்டை சாப்பிடுவதும் பாலியல் உறவில் ஈடுபடும் சக்தியை அதிகரிக்கும்.
உலர்ந்த ஷிடேக் காளான்கள். ஊறவைத்த வெந்தயம், முளைகட்டிய பயிர்கள், கருப்பு ராஸ்பெர்ரி, ப்ரோக்கோலி, காலே, அத்திப்பழம், பச்சை காய்கறிகள், அருகம்புல் சாறு, பூசணி விதை போன்றவை நீடித்த இன்பத்திற்கு உதவுகிறது.