* தனிப்பட்ட நபரின் உடல் தன்மை, அவரது ஆரோக்கியம், வெயில் அல்லது மழைக்காலம், வேலை பார்க்கும் சூழல், வசிக்கும் இடம் போன்றவற்றைப் பொறுத்துத்தான் எவ்வளவு குடிப்பது என்பதை முடிவு செய்யவேண்டும்.
* உடலின் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்துக்கும் சிறுநீர், வியர்வை, ரத்தஓட்டம் போன்றவை சீராக இயங்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது.
* வெளிர் மஞ்சள் அல்லது நிறம் இல்லாமல் சிறுநீர் வெளியேறினால் நீங்கள் சரியான அளவுக்கு தண்ணீர் குடிப்பதாக அர்த்தம். அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருந்தால் கூடுதலாக நீர் அருந்த வேண்டும்.
எவ்வளவு தண்ணீர் தேவை என்பதைக் கேட்டு வாங்கும் தன்மை அவரவர் உடலுக்கு உண்டு. அதனால் தாகம் ஏற்படும் நேரத்தில் எல்லாம் தண்ணீர் குடித்தாலே போதும். மேலும் தர்பூசணி, வெள்ளரி, இளநீர், பழச்சாறு, எலுமிச்சை சர்பத், நீராகாரம் போன்றவையும் உடலுக்கு நீர்ச்சத்தைக் கொடுக்கக்கூடியவையே.