தமிழ் சினிமாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போலவே சீரியலுக்கும் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. அதே போலவே சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் எப்போதுமே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கும்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இதன் முதல் பாகத்தில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரஷ்மிகா. கொ ரோனா காரணமாக சீரியல் நிறுத்தப்பட பின் வேறொரு கதையில் அதே பெயரில் சீரியல் தயாராகி இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் இந்த சீரியலில் தாமரை வேடத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார் ரஷ்மிகா. இந்த நிலையில் நடிகை ரஷ்மிகாவிற்கு மிகவும் அழகாக குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ளது.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.